Connect with us

#24 Exclusive

ஸ்டாலின் சசிகலாவை வச்சு செய்துள்ள தர்பார்? எதை சொல்லியிருக்கிறார்கள் தெரியுமா?

ரஜினி ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த தர்பார் திரைப்படம் சிறப்பு காட்சிகளுடன் உலகம் முழுவதும் வெளியாகிவிட்டது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் முன்னணி இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தர்பார் படத்தில் நயன்தாரா, சன்னா செட்டி, யோகிபாபு உள்ளிட்ட பல்வேறு திரைபிரபலங்கள் நடித்துள்ளனர்.

தர்பார் திரைப்படம் நிச்சயம் ரஜினி ரசிகர்களுக்கு ஒரு விருந்து என்றே சொல்லவேண்டும், குறிப்பாக கபாலி, காலா என ரஜினியின் இயல்பை இழந்ததாக அவரது ரசிகர்கள் விமர்சனம் செய்துவந்த சூழலில், மீண்டும் திரையில் ரஜினியின் விருந்து கிடைத்திருக்கிறது, AR முருகதாஸின் சமீபத்திய இரண்டு படங்கள் சரியாக செல்லாத நிலையில் மீண்டும் தான் யார் என்பதை தர்பார் மூலம் நிரூபித்துள்ளார் இயக்குனர். என்று பாசிட்டிவான விமர்சனங்கள் வந்துள்ளன.

இந்நிலையில் ரஜினியின் தர்பார் படத்தின் ஒரு காட்சியில் பணம் இருந்தால் இங்கு என்னவேண்டுமானாலும் செய்யலாம், ஏன் ஜெயிலில் இருந்து ஹாயாக ஷாப்பிங் கூட சென்றுவிட்டு வரலாம் என்பார்கள் சமீபத்தில் கூட தென் இந்தியாவில் ஒருவர் போனதை தொலைக்காட்சியில் பார்த்தேன் என்று கூற அதற்கு ஓ என ரஜினிகாந்த் கூறுவது போன்று காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

Loading...

பல்வேறு அரசியல் காட்சிகளும் இடையிடையே வச்சு செய்துள்ளனர், ஆனால் திமுக தலைவர் ஸ்டாலினை குறிப்பிட்டது போன்று எந்த காட்சிகளும் இடம்பெறவில்லை, வயதானவர் என்று ஒரு காட்சி வரும் அது ஸ்டாலினை சொன்னார்களா என படம் பார்த்து நீங்களே தெரிந்து கொள்ளுங்கள், மொத்தத்தில் தர்பாரை அவரது ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.

Loading...

©TNNEWS24

Loading...

Trending