தவிர்க்க சொன்ன திருமாவளவனுக்கு ஆப்பு அடித்த ஷாநவாஸ், முட்டு கொடுத்த சிறுத்தைகள் நிலைமை

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை பேச்சாளர்களில் ஒருவராக இருக்கும் ஷாநவாஸ் திமுகவில் இணைய இருப்பதாக பல நாட்களாக பேச்சு அடிபட்ட நிலையில் தற்போது அவர் திமுகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Loading...

விடுதலை சிறுத்தைகள் சார்பில் அக்கட்சியை சேர்ந்த எம் பி ரவி குமார் மற்றும் வன்னியரசு போன்ற மூத்த நிர்வாகிகள் இருப்பினும் ஊடகம் விவாதங்களில் அதிகம் பங்கு பெறுபவர் ஷாநவாஸ் தான், கட்சியின் நிலைப்பாட்டினை தாண்டியும் பல நேரங்களில் விமர்சனங்களை முன்வைத்துள்ளார், இந்நிலையில்தான் நடிகர் ரஜினி காந்தை விமர்சனம் செய்வதை தவிர்க்கும் படி அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், ஷாநவாஸிற்கு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

அதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது, கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்தியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கூறினார், மேலும் இந்திய முஸ்லிம்கள் வெளியேற்றும் சூழல் வந்தால் முதலில் அதற்கு எதிராக குரல் கொடுப்பேன் என்றும் தெரிவித்தார்.

Loading...

ரஜினியின் இந்த கருத்து பலரிடையும் தாக்கத்தை ஏற்படுத்தியது, ஆனால் ஷாநவாஸ் மிகவும் குதர்க்கமாக மராட்டியாரான ரஜினி இந்தியாவில் இருந்து வெளியேற்றும் நிலை வந்தால் நிச்சயம் குரல் கொடுப்போம் என்று ஆவேசமாக பதிவிட்டிருந்தார், தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாட்டினை தாண்டி முஸ்லீம் அமைப்பின் தலைவர் போன்று ஷாநவாஸ் நடந்து கொள்வதாகவும்,.

சட்டமன்ற தேர்தல் வரும் சூழலில் அமைதிகாக்க தலைமை வலியுறுத்தியும், தொடர்ந்து ஷாநவாஸ் அவருக்கு என்ன தோன்றுகிறதோ அதைத்தான் செய்வதாகவும், கட்சியின் முடிவு, தலைமைக்கு மரியாதை கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது, இந்த சூழலில்தான் ரஜினி விஷயத்தில் அமைதி காக்க ஷாநவாஸை மீண்டும் மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தினார்களாம்..,

ஆனால் அவரோ எனது கருத்தை சொல்வதற்கு சுதந்திரம் இல்லை என்றால் நான் கட்சியில் இருந்து என்ன பயன், நான் என் வழியை பார்த்துக்கொள்கிறேன் எனக்கு இலங்கை வரை செல்வாக்கு இருக்கு என கூறி ஆவேசம் அடைந்திருக்கிறார், இதனால் ஆத்திரம் அடைந்த மூத்த நிர்வாகி இந்த கட்சி இல்லை என்றால் உன்னால் இவ்வளவு தூரம் வளர்ந்திருக்க முடியுமா? என கேள்வி கேட்டதுடன் காட்டமாக திட்டி இருக்கிறார், அதனை தொடர்ந்து தற்போது தீவிர யோசனையில் இருக்கிறாராம் ஷாநவாஸ் திமுகவில் இணையலாமா?

இல்லை தமிமுன் அன்சாரி போன்று தனி இயக்கமாக பயணித்து திமுகவிடம் ஒரு எம் எல் ஏ சீட் வாங்கி ராமநாதபுரம் அல்லது இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் நின்று வெற்றி பெற்று கட்சியை வளர்க்கலாம் எனவும் திட்டமிட்டு இருக்கிறாராம், ஓ இதற்குப்பெயர்தான் தந்திரமா?

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*