நீ முஸ்லீமே இல்லை மோடியின் அடிமை திட்டி தீர்க்கும் போராட்டக்காரர்கள் அப்படி என்ன ஷாநவாஸ் சொன்னார் தெரியுமா?

விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஷா நவாஸ் இதற்கு முன்னர் இலங்கை குண்டு வெடிப்பு குறித்த தனியார் தொலைக்காட்சி நேர்காணலின் போது சில உண்மைகளை வெளிப்படையாக பேசியதற்காக சொந்த சமூகத்தை சேர்ந்தவர்களால் வசைபாட பட்டார்.

Loading...

இந்நிலையில் அதே போன்று ஒரு எதிர்ப்பினை சந்தித்துள்ளார், அதுவும் உலக நாடுகள் அறிவுபூர்வக கூறியுள்ள கொரனோ தொற்று குறித்து தனது கருத்தினை பதிவு செய்ததற்காக, கொரனோ தொற்று நோயின் காரணமாக CAA எதிர்ப்பு போராட்டத்தை நடத்தி வந்த இஸ்லாமிய அமைப்புகள் சட்டென்று தங்கள் போராட்டத்தை முடித்து கொள்வதாக அறிவித்தன, இதில் இருவேறு கருத்துக்கள் உள்ளன, அல்லா இருக்கிறார் கொரனோ நம்மை ஒன்றும் செய்யாது போராட்டத்தை தொடருவோம் என ஒருதரப்பும்.

அரபு நாடுகளில் கொரனோ தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் இப்போது போராட்டம் வேண்டாம் என ஒரு தரப்பும் எதிர் கருத்து கூறிவரும் நிலையில் ஷா நவாஸ் தனது கருத்தினை தெரிவித்துள்ளார் அதில்:- உலகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பொது இடங்களில் மக்கள் கூடுவது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளன.

Loading...

கோரோனாவை நம் நாடு பேரிடராக அறிவித்துள்ள நிலையில் அதன் தீவிரத்தை உணர்ந்து அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். பேரிடர் தடுப்பில் அரசு நிர்வாகத்தின் போதாமையை அனுபவத்தில் கண்டுள்ளோம். ஒவ்வொரு பேரிடரிலும் அரசையும் தாண்டி மக்கள் களமிறங்கித்தான் பெரும் சேதங்களை தடுத்துள்ளோம். அதுபோல், இந்த கொரோனா தடுப்பு நடவடிக்கையிலும் மக்களின் பங்கு முக்கியமானது.

கொரோனா எளிதில் பற்றிப் பரவும் ஒரு கொடும் நோயாக இருக்கும் நிலையில், உலகின் வலிமையான நாடுகளே அதை சவாலுடன் எதிர்கொள்ளும் நிலையில், இங்கும் மக்கள் ஓரிடத்தில் ஒன்று கூடுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். அந்த வகையில் அனைத்துப் போராட்டங்கள் மற்றும் பொதுக் கூட்டங்களையும் ஒத்திவைப்பது நன்று.

இப்போது போராட்டத்தை ஒத்திவைத்தால் இனி இதுபோல் மக்கள் அணிதிரள்வது எளிதல்ல என்று சிலர் கருதுவது அபத்தம். மக்களின் எழுச்சியையும் திரட்சியையும் அவர்களை நோக்கி வரும் நெருக்கடியும் ஒடுக்குமுறையும் தான் தீர்மானிக்குமே தவிர, தற்காலிக முடிவுகளல்ல.

NPR கணக்கெடுப்பு என்னும் கத்தி தொங்கிக் கொண்டிருக்கும் வரை அதை எதிர்த்து மக்கள் போராடவே செய்வார்கள். தற்காலிகமாக ஒத்திவைப்பதாலேயே அது நீர்த்துப்போய் விடாது. எனவே, கோரோனா தடுக்கப்பட்ட பிறகு எப்படி பொதுவில் எல்லாம் இயல்பாக நடக்குமோ அப்படியே போராட்டமும் நடக்கும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் அவருக்கு எதிராக பல்வேறு நபர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர், நீ முஸ்லிமே இல்லை வேலூர் இப்ராஹிம் போன்று முஸ்லீம் மக்களை திசை திருப்பும் ஒரு சங்கி எனவும், மற்றொருவர் மோடியின் அடிமை எனவும் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர், ஆனால் வெகு அதிகமான நபர்களோ அல்லா இருக்கையில் நமக்கு எந்த ஆபத்தும் வராது செத்தாலும் களத்தில் சாவோம் வாருங்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் எதிர் கருத்து பதிவு செய்து வருகின்றனர்.

ஷாநவாஸ் பல பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடும்போது கைதட்டிய கூட்டத்தினர், இப்போது உண்மையை சொல்லிய நிலையில் அவரை எதிர்ப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*