தொடர் போலி செய்தியை பரப்பியது எதிரொலி ஜோதிமணியை கருப்பு பெட்டியில் வைக்க முடிவு !

காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும் கரூர் பாராளுமன்ற உறுப்பினருமாகிய ஜோதிமணியை ட்விட்டர் ஷடோ பேன் அதாவது கருப்பு பெட்டியில் வைக்க முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றனர்.

Loading...

சமூக வலைத்தளங்கள் மூலம் போலி செய்திகள் அதிகஅளவில் பரவி பல நேரங்களில் கலவரமோ உயிர் பலியோ உண்டாகும் சூழலுக்கு வந்து விடுகிறது, இந்த நிலையில்தான் ஜோதிமணி கடந்த வெள்ளி இரவு நடைபெற்ற வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் போலீசார் தாக்கியதாக செய்தி ஒன்றிணை தனது அதிகார பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இதே செய்தியை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்திலும் பதிவிட்டார்.

ஆனால் அந்த செய்தி முழுமையான பொய் செய்தி எனவும், காவல்துறை மீது பழியை போடவும், கலவரத்தை உண்டாக்கவும் சில அரசியல் கட்சிகளும், கலவரக்காரர்களும் கிளப்பி விட்ட புரளி என்பது காவல்துறை அறிக்கையின் மூலம் வெளிவந்தது, அதனை தொடர்ந்து தவறான புகைப்படத்தை பகிர்ந்ததற்காக செந்தில் மன்னிப்பு கேட்டார்.

Loading...

முதலில் ட்விட்டரில் அதிகார பூர்வ கணக்கு வைத்திருப்பவர்கள் போலி செய்தியை பரப்பினால் அது உறுதியானால் அதுகுறித்த பதிவுகளை நீக்கி விடுவார்கள், மேலும் பலர் மன்னிப்பும் கேட்டுவிடுவார்கள் ஆனால் இதுவரை ஜோதிமணி 10 ற்கும் மேற்பட்ட போலி செய்திகளை பரப்பியதாகவும், இதற்கு முன்னர் சினிமா விமர்சகர் பாண்டா பிரசாந்தை ஒருமையில் திட்டிவிட்டு அது நான் போட்ட ட்வீட் இல்லை என ஜோதிமணி கூறியிருந்தார்.

ஆனால் அதனை செய்தது அவர்தான் எனவும் பின்பு உறுதியானது, இதுபோல் மோடிக்கு எதிராக அவரது உடை குறித்த விலையில் போலி செய்தியை பரப்பினார் என்றும் இரண்டு நாட்களுக்கு முன்னர் காவல்துறை நடத்திய தடியடியில் இஸ்லாமியர் ஒருவர் இறந்ததாக கதையை திணித்துள்ளார், இதன் மூலம் பொறுப்பானவர் என்று ஜோதிமணிக்கு ட்விட்டரில் வெரிபைட் ஐ டி கொடுத்தால் அவரோ போலி செய்தியை பரப்புகிறார் என்ற காரணத்தால்.

அவரை குறிப்பிட்ட காலத்திற்கு ட்விட்டர் ஷடோவ் பேன் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன, இதன் மூலம் அவரது டிவீட்கள் முன்பு போல் அதிகம் நபர்களை சென்றடையாது என கூறப்படுகிறது.

©TNNEWS24

Loading...
About Tnnews24 2663 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*