திமுகவிற்கு அடுத்த ஆப்பு ! நேரடியாக களத்தில் இறங்கியது சிபிசிஐடி !

திமுக பிரமுகரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர் எஸ் பாரதி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் இன்று காலை கைது செய்யபட்டு அதன் பிறகு இடைக்கால ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளார், இந்நிலையில் திமுக பணம்காட்டு நரி எனவும் இந்த சலசலப்பிற்கு எல்லாம் அஞ்சாது என ஸ்டாலின் அறிக்கை வெளியிட்ட நேரம் அடுத்த ஆப்பு திமுக முக்கிய பிரமுகருக்கு அரங்கேறியுள்ளது.

Loading...

கடந்த சில தினங்களுக்கு முன்பு கரூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்த திமுக மாவட்ட பொறுப்பாளரும், அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி. மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துவிட்டு பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

மாவட்ட ஆட்சியர் படித்த முட்டாள் என்றும், கொரோனா தொடர்பான கூட்டத்திற்கு என்னை அழைப்பதில்லை என்றும் கூறினார். மேலும், என் பின்னர் 2 லட்சம் பேர் உள்ளனர்; அவர் இனி வெளியே நடக்க முடியாது என்று கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

Loading...

இதனையடுத்து கரூர் மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் அளித்த புகாரின் அடிப்படையில் செந்தில்பாலாஜி மீது IPC 143, 270, 153, 294, 353, 506(2) உள்ளிட்ட 6 சட்டப் பிரிவுகளின் கீழ் கரூர் தாந்தோனிமலை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது இந்த வழக்கில் கைதாகாமல் இருக்க செந்தில் பாலாஜி முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார்.

இந்த சூழலில் செந்தில் பாலாஜி IAS அதிகாரியான மாவட்ட ஆட்சியருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் உள்துறை அமைச்சகத்திற்கு சென்றது, இதனையடுத்து, தற்போது செந்தில் பாலாஜி மீதான வழக்கு சிபிசிஐடி பிரிவிற்க்கு மாற்றப்பட்டுள்ளது, விரைவில் செந்தில் பாலாஜி கைதாகலாம் எனவும் அவருக்கு ஜாமீன் கிடைப்பதற்கு வாய்ப்புகள் குறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தொடர்ந்து தாழ்த்தப்பட்ட சமூகத்தை தரக்குறைவாக விமர்சனம் செய்த வழக்கில் ஆர் எஸ் பாரதி, T R பாலு, தயாநிதிமாறன் ஆகியோர் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்ட சூழலில் தற்போது திமுக MLA செந்தில் பாலாஜி மாவட்ட ஆட்சியருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வழக்கு சிபிசிஐடி பிரிவிற்க்கு மாற்றப்பட்ட சம்பவம் திமுக தலைமை மீது மக்களுக்கு அதிருப்தியை உண்டாகியுள்ளது.

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*