செந்திலின் தற்போதைய நிலை என்ன? கடும் கோபத்தில் குணசேகரன் !

தனியார் ஊடகம் நிர்வாகம் தனது பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க காரணமாக அமைந்தது தனியார் தொலைக்காட்சியில் நெறியாளராக நடுநிலையுடன் பணியாற்ற வேண்டிய செந்திலின் சமூக வலைத்தள பதிவுதான். தனியார் ஊடகத்தில் அரசியல் பிரிவு ஆசிரியராக பணியாற்றிய செந்தில் இந்தியா சீனாவின் மொபைல் ஆப்களை தடை செய்த செய்தியை கிண்டல் செய்திருந்தார்.

Loading...

சீப்பு ஒளித்து வைத்துவிட்டோம் இனி கல்யாணம் நின்னுரும்ல என கிண்டல் செய்து இருந்தார், இது பலருக்கும் கொந்தளிப்பை உண்டாக்க அதனை கண்டிக்கும் விதமாக மாரிதாஸ் வீடியோ வெளியிட்டு இருந்தார், இதனையடுத்தி செந்தில், குணசேகரன் உள்ளிட்ட ஊடகவியலாளர்களுக்கு எதிராக போராட்டம் கிளம்ப இன்று குணசேகரன் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார்.

அவருக்கு முன்னதாக இதுவரை 26 நபர்கள் பணியில் இருந்து கட்டாயமாக வெளியேற்ற பட்டு இருக்கிறார்கள், இந்த சூழலில் அனைத்து பிரச்சனைக்கும் காரணமான செந்தில் என்ன நிலையில் இருக்கிறார் என்ற கேள்வியை பலர் எழுப்பி வருகின்றனர், குறிப்பாக செந்திலும் ஒரு சில வாரங்களில் வேலையை விட்டு சென்றுவிடுவார் எனவும் அவரது ஒப்பந்தம் முடிவடைய சில மாதங்கள் இருப்பதால் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வில்லையாம்.

Loading...

ஆனால் அவர் பங்குபெறும் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு, அவர் தனது அறையில் மட்டுமே இருக்கிறாராம், இதற்கு முன்னர் இரண்டு தொலைக்காட்சிகளில் பணியாற்றிய செந்தில் அந்த பக்கம் செல்ல வாய்ப்பு இல்லாத காரணத்தால், குணசேகரனுடன் மீண்டும் இணைந்து சத்தியம் தொலைக்காட்சிக்கு செல்ல வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது, ஆனால் அவரும் இன்றோ அல்லது சில நாட்களில் தனது பணியை விட்டு விலகுவார் என்பது மட்டும் உறுதி என்கின்றனர் நெருக்கமானவர்கள்.

மேலும் வேலை இழந்த குணசேகரன் தொடர்பு கொண்டு நீங்கள் போட்ட அந்த சீப்பு கமெண்ட் யாரை பழிவாங்கியதோ இல்லையோ நம்மை பழிவாங்கி விட்டதே என வேதனையுடன் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3945 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*