செந்தில் பாலாஜி ஜோதிமணி நட்பில் விரிசல் களத்தில் இறங்கிய உறவினர்கள் ! பொதுவெளிக்கு வந்ததால் அதிருப்தி !!

திமுக காங்கிரஸ் கூட்டணி உருவானதில் இருந்து இணை பிரியாத அரசியல் சகோதரத்துவத்துடன் வலம்வந்தவர்கள் கரூர் எம் பி ஜோதிமணியும், திமுக எம் எல் ஏ செந்தில்பாலாஜியும், செந்தில் பாலாஜி திமுகவில் இணைவதற்கு முன்னர் மிக கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி செந்தில் பாலாஜியை விமர்சனம் செய்தவர்கள் பட்டியலை எடுத்தால் அதில் ஜோதிமணி முதல் வரிசையில் இருப்பார்.

Loading...

ஆனால் செந்தில் பாலாஜி அரசியல் மாறான நிலைப்பாடு எடுத்த நிலையில் இருவரும் போராட்டம், ஆர்ப்பாட்டம், நன்றி செலுத்தும் பயணம் ஆகியவற்றில் ஒன்றாகவே பயணித்தனர், டெல்லி செல்வதில் இருந்து வெளிநாடு செல்லும் வரை விமான நிலைய வாசலுக்கே செந்தில்பாலாஜி சென்று ஜோதி மணியை வழியனுப்பி வைத்தார். இந்த சூழலில்தான் உறவினர்களால் இருவரது நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக பல இடங்களில் வெற்றி பெற்றாலும் எதிர்பார்த்த அளவு கரூர் மாவட்டத்தில் வெற்றியை பதிவு செய்யமுடியவில்லை, இதற்கு செங்ய்ல்பாலாஜி கடுமையாக உழைத்தாலும், நிர்வாகிகள் மத்தியில் ஒருங்கிணைப்பு கிடைக்கவில்லை என்று குற்றசாட்டு எழுந்தபோது, நிர்வாகிகள் தரப்பிலோ அவர் எங்களுடன் ஆலோசனை செய்வதைவிட கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியினருடன் தான் ஆலோசனை செய்கிறார்.

Loading...

இவ்வளவு ஏன் ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஜோதிமணியின் சகோதரிக்கு ஒரு பாதிப்பு என்றவுடன் அங்கே சென்று தர்ணாவில் ஈடுபடுகிறார் ஆனால் திமுக நிர்வாகிகளை கண்டுகொள்வது இல்லை எனவும் கூறுகின்றனர், இந்நிலையில் செந்தில்பாலாஜியின் உறவினர்களோ உங்களால் தான் ஜோதிமணி எம் பி யாக வெற்றி பெற்றார், ஆனால் தற்போது உங்களது வீடு அலுவலகங்களில் திட்டமிட்டு சோதனை நடைபெற்று இருக்கிறது அரசியல் பழிவாங்கல் நடைபெற்று இருக்கிறது இவற்றிற்கு ஜோதிமணி நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க தேவையில்லை ஆனால் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து சொல்லியிருக்கலாமே இதுதான் நட்பா என வேதனை பட்டிருக்கிறார்கள்.

இதனை காட்டிலும் செந்தில்பாலாஜியின் குடும்பத்தினர் மத்தியிலும் அதிருப்திகள் எழுந்துள்ளன, இவற்றை வைத்துதான் கடந்த சில நாட்களாக இருவரும் அரசியல் குறித்து எந்த பேச்சும் பேசவில்லை எனவும் கூறப்படுகிறது, ஜோதிமணிக்கு ஒரு அரசியல் தேவை எனும்போது செந்தில்பாலாஜி உதவிய நிலையில் அவருக்கு ஒரு பிரச்சனை எனும்போது வாய்மூடி ஜோதிமணி இருப்பது குறித்து உறவினர்கள் சலசலப்பை ஏற்படுத்த வேறு வழியின்றி செந்தில்பாலாஜி நட்பை முறித்துக்கொண்டு சொந்த அரசியலை கவனிக்க தொடங்கிவிட்டாராம்.

வருகின்ற நகராட்சி தேர்தலில் உள்ளாட்சி தேர்தல் முடிவினை போன்று இதே நிலை நீடித்தால் என்ன ஆகும் என உறவினர்கள் கேட்க அதிர்ந்து போய் விட்டாராம். ஆனால் ஜோதிமணி இனிமேலாவது குரல் கொடுப்பாரா என பல கேள்விகள் எழுந்துள்ளன, பொதுவெளியில் உறவினர்கள் பேசுவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*