Connect with us

சினிமா

தொடர் தோல்வி! சோர்ந்துபோன செல்வராகவன் ரசிகர்கள் ! நம்பிக்கை கொடுத்த டுவிட் !

தொடர் தோல்வி! சோர்ந்துபோன செல்வராகவன் ரசிகர்கள் ! நம்பிக்கை கொடுத்த டுவிட் !

இயக்குனர் செல்வராகவன் தனது அடுத்த படத்துக்கான திரைக்கதையை எழுத ஆரம்பித்து விட்டதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இயக்குனர்களுக்கு என்று தனியாக ரசிகர்கள் வட்டம் உள்ளவர்களில் இயக்குனர் செல்வராகவன் முக்கியமானவர். அவரது புதுப்பேட்ட்டை, செவன் ஜி ரெயின்போ காலணி ஆகிய படங்களை சமூக வலைதளங்களில் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகின்றன.

Loading...

சமீபத்தில் அவரது புதுப்பேட்டை படம் திரும்பவும் ரிலிஸ் செய்யப்பட்ட போது கூடிய பார்வையாளர்களின் எண்ணிக்கை அபரிமிதமானதாக இருந்தது. ஆனால் செல்வராகவன் கடந்த சில வருடங்களாக தனது கேரியரின் மோசமான காலகட்டத்தில் இருக்கிறார். அவர் இயக்கிய இரண்டாம் உலகம் மற்றும் என் ஜி கே ஆகிய படங்கள் படுதோல்வி அடைந்தது மட்டும் இல்லாமல் திராபையாக இருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

Loading...

இதனால் அவரது ரசிகர்கள் மிகவும் ஏமாற்றத்திற்குள்ளாக அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக தனது டிவிட்டர் பக்கத்தில் ‘அடுத்த படத்துக்கான திரைக்கதையை எழுத ஆரம்பித்து விட்டதாக சொல்லியுள்ளார். ஏற்கனவே அவரின் அடுத்த படத்தின் ஹீரோ தனுஷ்தான் என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படம் புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending