அனைவரும் வெளியே சென்ற நேரம் பின்வாசல் வழியாக உள்ளே வந்த மர்ம நபர்கள் கலையிழந்த கல்யாண பெண்ணின் வீடு !

திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு குடும்பத்தில் உள்ள அனைவரும் மண்டபத்திற்கு சென்ற நேரம் அடையாளம் தெரியாத நபர்கள் பின்புறமாக பூட்டினை உடைத்து கல்யாணத்திற்கு வைத்திருந்த நகை, பணம் உள்ளிட்டவற்றை கொள்ளை அடித்து சென்றுள்ள சம்பவத்தால் கல்யாண வீடே கலையிழந்து வேதனையில் உள்ளது.

Loading...

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 100 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வாலாஜாபேட்டையை அடுத்த கிராமணி தெருவில் வசித்து வரும் சரவணன் என்பவர் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தாருடன் ஆரணிக்கு சென்று இருந்தார்.

Loading...

அப்போது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பிரோவில் இருந்த 100 சவரன் தங்க நகைகள் மற்றும் 3 லட்சம் ரூபாயை கொள்ளை அடித்து சென்றனர். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் அவர்களிடம் தகவல் தெரிவித்தன் அடிப்படையில் பணம், நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரண்டு பெண்களின் திருமணத்திற்கு பல ஆண்டுகளாக சேர்ந்த பணம் என்று குடும்பத்தினர் வேதனை தெரிவித்து வருகின்றனர், உடனடியாக குற்றவாளிகளை கண்டறிய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*