Connect with us

அரசியல்

ரசிகர்களால் சடடம் ஒழுங்கு சீர்குலையும் என்றால் அவர்கள் யார்? ரஜினியை டார்கெட் செய்யும் சீமான்!

ரசிகர்களால் சடடம் ஒழுங்கு சீர்குலையும் என்றால் அவர்கள் யார்? ரஜினியை டார்கெட் செய்யும் சீமான்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்மந்தமாக ரஜினி, நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என நீதிமன்றத்தின் உத்தரவால் இப்போது சர்ச்சை வெடித்துள்ளது.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராடியபோது, நடந்த துப்பாக்கி சூட்டால் 13 பேர் பலியானார்கள். அப்போது அங்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த நடிகர் ரஜினி, பின்னர் செய்தியாளர்களிடம் ‘கூட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்து விட்டதால் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது’ எனக் கூறி சர்ச்சைகளைக் கிளப்பினார்.

Loading...

இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக விசாரித்து வரும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் ரஜினியை நேரில் வந்து விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்பியது. ஆனால் ரஜினியோ ‘நான் தூத்துக்குடிக்கு வந்தால் ரசிகர்கள் கூட்டம் கூடி, சட்டம் ஒழுங்கு சீர்கெடும். அதனால் நான் எழுத்துப்பூர்வமாக பதிலளிக்க தயார்’ தெரிவித்திருந்தார்.

Loading...

ரஜினியின் இந்த பதில் மீண்டும் சர்ச்சைகளை எழுப்பியுள்ள நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்துவிட்டார்கள்’ என்று சொல்ல தூத்துக்குடி சென்றபோது கெடாத சட்டம் ஒழுங்கு, விசாரணை ஆணையத்தில் ஆஜராகும்போது மட்டும் கெட்டுவிடுகிறதா?

ரசிகர்கள் கூடி சட்டம் ஒழுங்கு சீர்குலையுமென்றால், உங்கள் ரசிகர்கள் யார்? இது எப்டி இருக்கு?! ‘ என ரஜினிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending