Connect with us

#24 Exclusive

அனைத்தும் திட்ட மிட்ட நாடகம் சீமான், திமுக எம்எல்ஏ கீதா ஜீவன் கைதா? மீண்டும் பரபரப்பாகும் தமிழகம் !

Published

on

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூலம் வெளிப்படும் காற்றில் இருந்து நச்சுப்புகை வெளிப்படுவதாகவும் அதன்மூலம் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் மக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதாக கூறி மிக பெரிய போராட்டங்கள் நடத்தப்பட்டன, அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகள், வெளிநாட்டு உதவி பெரும் அமைப்புகள், கிறிஸ்துவ பாதிரியார்கள், சீமான், திருமுருகன் காந்தி, இயக்குனர்கள்,
திமுக எம் எல் ஏ கீதா ஜீவன் உள்ளிட்டோர் தலைமையில் மிக பெரிய போராட்டங்கள் முன்னெடுக்க பட்டன.

இந்த சூழலில்தான் போராட்டம் கட்டுக்கடங்காமல் சென்றது தனியார், பொதுமக்கள் வாகனங்கள் சூறையாடப்பட்டன, தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்திற்குள் சென்று போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த சூழலில்தான் கலவரக்காரர்கள் நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியதில் அப்பாவி பொது மக்கள் 13 பேர் பலியாகினர் அதில் இருவர் பெண்கள் அதனைத்தொடர்ந்து போராட்டம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை நியமித்து அரசு உத்தரவிட்டது.  அதன்படி, அருணா ஜெகதீசன் தனது முதல்கட்ட விசாரணையை கடந்த ஜூன் 4 ஆம் தேதி தொடங்கினார். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும்,

Loading...

காயமடைந்தவர்களையும் நேரில் சந்தித்து 5 கட்டமாக 87 சாட்சிகளிடம் அவர் விசாரணை மேற்கொண்டார். 209 சான்றாவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன. 6 ஆவது கட்ட விசாரணையாக போராட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள், பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்தவா்களிடம் விசாரணை நடத்தினார்.

Loading...

இந்த சூழலில்தான் ஸ்டெர்லைட் ஆலைமூலம் எந்த நச்சு காற்றும் உருவாகவில்லை என்றும் போராட்டம் திட்டமிட்டு அரசியல் லாபத்திற்காக உருவாக்கப்பட்டது என்று ஒருநபர் ஆணையம் முடிவு செய்துள்ளதாகவும், இதுகுறித்து முழு அறிக்கை விரைவில் வெளியாகும் என்றும் சமீபத்தில் வெளியான காசு மாசின் அளவும் அதையே குறிப்பிடுவதாகவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் போராட்டத்தை முன்னின்று நடத்திய திமுக எம் எல் ஏ கீதா ஜீவன், கடைசி நாளுக்கு முன்னர் கலந்து கொண்ட சீமான் உள்ளிட்ட 14 பேர் கைது செய்ய படுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. அப்போ ஸ்டெர்லைட் ஆலையினால்தான் புற்று நோய் பரவுகிறது என்ற சொன்ன தகவல் அனைத்தும் பொய்யா? அனைத்திலும் அரசியல்தான் உள்ளதா?

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending