Connect with us

#24 Exclusive

மராட்டியர்களின் படையெடுப்பும், ரஜினியின் படமெடுப்பும்: சீமான்

சரபோஜி மன்னர் காலத்தில் மராட்டியர்கள் தமிழகத்தின் மீது படையெடுத்து வந்து எங்கள் மூதாதையர்களை வென்று, ஆட்சி செலுத்தினர்கள். அதேபோல் மராட்டியரான ரஜினி மக்களாட்சி காலத்தில் திரைப்படம் எடுத்து எங்களை ஆள நினைக்கின்றார். அது தவறு, நடக்கவும் நடக்காது என நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசினார்.

மேலும் ரஜினிகாந்த் அவர்கள் ஒரு கட்சியின் தலைவராக இருந்தோ அல்லது ஆலோசகராக இருந்தோ மக்களுக்கு தொண்டு செய்யுங்கள். நாங்கள் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்க மாட்டோம். ஆனால் முதல்வராகி எங்களை ஆளவும், அதிகாரம் செலுத்த வேண்டும் என நினைப்பது தவறு. அதற்கு நாங்கள் ஒருபோதும் விடமாட்டோம்’ என்று கூறினார்.

மேலும் சிவன், பார்வதியின் கணவர் இல்லை என்றும், சிவன் பார்வதியின் மகன் தான் முருகன் என்பது கட்டுக்கதை என்றும் முருகனின் காலம் வேறு சிவனின் காலம் வேறு என்றும் ஒரு புதிய கண்டுபிடிப்பை இந்த நிகழ்ச்சியில் அவர் தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Loading...
Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending