ஆளுமை குறித்து பேச ரஜினிக்கு அருகதை இல்லை: சீமான்

Loading...

ரஜினிகாந்த் ஆளுமை குறித்து பேச தகுதியற்றவர் என்றும், அவர் கூறிய ஒரு கருத்தையே அவரால் அரைமணி நேரம் கூட நிலைப்பாட்டில் நிற்க முடியவில்லை என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் செய்தியாளர்களிடம் கூறியதாவது: என் மீதும் திருவள்ளுவர் மீதும் காவிச்சாயம் பூச முடியாது என்று கூறிய ரஜினிகாந்தால் அரை மணிநேரம் கூட அதே நிலைப்பாட்டில் நிற்க முடியவில்லை. சில நிமிடங்களில் அவர் கூறிய கருத்தை அவரே பூசி முழுகினார்.

Loading...

இந்த விஷயத்தில் விஜயகாந்த் பாராட்டுக்குரியவர். கருணாநிதியும் ஜெயலலிதாவும் அதிகாரத்தில் இருக்கும்போது மாற்றுக்கட்சியாக வருவேன் எனக்கூறுவதற்கு ஒரு துணிவு வேண்டும். ஆளுமை வேண்டும். அதையும் துணிந்து விஜயகாந்த் வந்தார்.

வெற்றிடம் இருப்பதால் தான் அரசியலுக்கு வருகிறீர்கள். இல்லையென்றால் வந்திருக்க மாட்டீர்கள். இது எந்த மாதிரியான ஆளுமை? நீங்கள் ஆளுமையை பற்றி பேசக்கூடாது. நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்த முதலமைச்சரின் கருத்துக்கு நான் உடன்படுகிறேன். ஆனால் அதே நேரத்தில் சிவாஜியை பற்றி பேசியதும் அவரை சிறுமை படுத்தியதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. எம்ஜிஆரை போல சிவாஜிக்கு அரசியல் நுட்பம் தெரியவில்லை’ என்று சீமான் கூறினார்.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*