அயோத்தி தீர்ப்பு குறித்து சீமான், திருமாவளவன் கருத்து

Loading...

அயோத்தி வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த தீர்ப்புக்கு பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தாலும் ஒருசில அரசியல் கட்சிகள் அதிருப்தியும் தெரிவித்துள்ளன.

அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் சீமான் இந்த தீர்ப்பு குறித்து கூறியபோது, ‘அயோத்தி வழக்கில் வழங்கப்பட்டது தீர்ப்புதானே ஒழிய, நீதியல்ல! என்று, பாபர் மசூதி இடிப்பை சட்டவிரோதம் எனும் உச்ச நீதிமன்றம், இடித்தவர்களுக்கு எவ்விதத் தண்டனையும் வழங்காதது பெருத்த ஏமாற்றம் என்றும், பாபர் மசூதி இடிப்பென்பது இசுலாமிய இறையியலுக்கு மட்டுமல்லாது, இந்தியாவின் இறையாண்மைக்கும் எதிரானது என்றும் தெரிவித்துள்ளார்.

Loading...

அதேபோல் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியபோது, ’உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இந்த தீர்ப்பு சட்டத்தின் அடிப்படையிலும், ஆதாரங்களின் அடிப்படையிலும், சாட்சியங்களின் அடிப்படையில் வழங்கப்பட்டதாக அமையவில்லை என்றும் சாஸ்திரங்களின் அடிப்படையில் மக்களின் நம்பிக்கைகளின் அடிப்படையில் ஒரு சமரச முயற்சியின் அடிப்படையில் அளிக்கப்பட்ட தீர்ப்பாகத்தான் அமைந்திருக்கிறது என்றும் தெரிவித்தார். மேலும் இஸ்லாமிய அமைப்புகள் உரிய ஆவணங்களை அளிக்கவில்லை என்று கூறிய உச்சநீதிமன்றம் இந்து அமைப்புகள் என்ன ஆவணங்களை, ஆதாரங்களைச் சமர்ப்பித்தார்கள் என்று கூறவில்லை என்றும், அயோத்தியில் ராமர் பிறந்தார் என்று சாஸ்திரங்கள் கூறுவதால் அந்த சாஸ்திரங்களில் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதால், அந்த நம்பிக்கையில் நாம் தலையிட முடியாது என்கிற இந்த அளவுகோலின் அடிப்படையில் தான் இந்த தீர்ப்பு அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார்

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*