அனுமதியின்றி பள்ளி மாணவிகளை CAA விற்கு எதிராக போராட வைத்த கொடுமை ! பெற்றோர்கள் குவிந்து வருவதால் பதற்றம்?

ஸ்ரீவில்லிபுத்தூர் :- விழுப்புரம் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள திரு இருதயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களையும் அவர்களுடைய ஒப்புதல் இன்றி பள்ளி நிர்வாகம் இந்திய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட CAA சட்டத்திற்கு எதிராக போராட வைத்த கொடூரம் அரங்கேறியுள்ளது.

Loading...

நேற்று கிறிஸ்துவ அமைப்பால் நடத்தப்படும் பள்ளி மாணவர்கள் இடையே ஆசிரியர்கள் குடியுரிமை சட்டத்தால் மோடி முஸ்லிம்களை நாட்டை விட்டு அனுப்ப போகிறார், இதனால் நாளை உங்கள் நண்பர்கள் இருப்பார்களா என்பது கூட தெரியாது என்று கூறி வளரும் இளம் பள்ளி மாணவிகள் இடையே தவறான தகவலை பரப்பி அவர்களை பள்ளியில் இருந்து அழைத்து வந்து சில ஊரில் உள்ள இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்களையும் கலந்து கொள்ள செய்து !

மாணவி ஒருவரிடம் கோசம் போட காகிதத்தை கொடுத்து மற்ற மாணவர்களை அதனை பின்பற்றுமாறு வீதியில் அழைத்து வந்திருக்கிறார்கள், இதனை அந்த பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் துணையுடன் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஆசிரியர் செய்ததாக கூறப்படுகிறது, இந்நிலையில் அந்த வழியாக வந்த இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்காத போது எவ்வாறு போராடலாம் எனவும், மேலும் பள்ளி குழந்தைகளை போரட்டத்தில் ஈடுபட செய்வது சட்டப்படி குற்றம் என கூறி தடுத்து நிறுத்தி கோஷமிட்டனர்.

Loading...

இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் வேகமாக மாணவர்களை அழைத்து கொண்டு சென்றுவிட்டனர், இந்நிலையில் அனுமதியில்லாமல் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்த பள்ளி ஆசிரியர்கள் மீதும் போராட்டத்தை தடுத்து நிறுத்திய இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த தகவல் அறிந்த பெற்றோர்கள் பெண்களை பள்ளிக்கு படிக்க அனுப்பினால் நீங்கள் போராட்டத்திற்கு அழைத்து செல்கிறீர்களா? என்றும் யாருடைய அனுமதி பெற்று பெண்களை போராட்டத்திற்கு அழைத்து சென்றீர்கள் எனவும் கேள்வி எழுப்பி பள்ளியில் குவிந்து வருகின்றனர், மேலும் இந்து அமைப்புகள் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்த ஆசிரியர்களை கைது செய்து அவர்களை பணியிடை நீக்கம் செய்யவேண்டும் என குவிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது பள்ளி கல்வித்துறை இது குறித்து முழுமையாக விசாரணை நடத்தி பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் ஆளும் தமிழக அரசு பள்ளி மாணவர்கள் தவறாக வழிநடத்தப்படுவதை ஏற்கிறதா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3897 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*