Connect with us

#24 Exclusive

விநாயகர் சிலையை அகற்றவந்தவர்களிடம் இரண்டே கேள்விகளை கேட்ட சிறுமி ! மீண்டும் வைத்துவிட்டு தெறித்து ஓடிய காவலர்கள் சமூகவலைத்தளங்களில் வைரல்

சமூகவலைத்தளம்.,

சமூகவலைத்தள காலங்களில் பலரும் தங்கள் என்ன ஓட்டங்களை வெளிப்படையாக சொல்லி மக்கள் மத்தியில் தங்கள் கருத்துக்களை எளிதில் கொண்டு சேர்ந்து விடுகின்றனர், அந்த வகையில் தேசிய சிந்தனை கொண்ட சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சிறுமி சாதனா இணையதளங்களில் அதிகம் பேசப்படுபவராக மாறிவருகிறார்.

தனியார் பள்ளியில் 5 – ம் வகுப்பு படித்துவரும் சாதனா திமுக தலைவர் ஸ்டாலின், கி. வீரமணி திருமுருகன் காந்தி, ஆகியோர்களை விமர்சனம் செய்து கடிதம் எழுதியிருப்பது இணையதளங்களில் வெளியாகி வைரல் ஆனது, மேலும் தினமலர் நாளிதழ் மற்றும் தமிழ் வாரஇதழ்களிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

Loading...

அந்த அளவு அரசியல் கேள்விகளை எழுப்பி இருப்பவர் சாதனா ! நேற்று தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் வேலையில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள தனது வீட்டின் வாசலில் 2 அடி பிள்ளையார் சிலையை வைத்து சாதனா குடும்பத்தினர் பூஜை செய்து வந்தனர்.

Loading...

இது குறித்து அடையாளம் தெரியாத சிலர் தேவகோட்டை தாலுகா காவல் நிலையத்திற்கு போன் செய்து அனுமதி பெறாமல் சிலர் பிள்ளையார் சிலைகளை பொது இடத்தில் வைத்து இருப்பதாகவும், இதனால் சமூகத்தில் அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்று புகார் கூறியிருக்கின்றனர்.

அதன் பெயரில் சாதனா வீட்டிற்கு சென்ற காவல்துறையினர், விநாயகர் சிலையை அப்புறம் படுத்த வேண்டும் என்றும் இல்லை என்றால் தாங்கள் எடுத்து சென்று ஆற்றில் கரைத்து விடுவதாக எச்சரிக்கை விடுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள், ஊர் மக்கள் வீட்டு வாசலில், இரண்டு அடி விநாயகர் சிலை வைத்து வழிபட யாரிடம் அனுமதி வாங்கவேண்டும் இது போல் சட்டங்கள் இருக்கிறதா என்று கேள்வி எழுப்ப?

அதுவரை அமைதியாக இருந்த சிறுமி காவல்துறையினரை நோக்கி, எந்த சட்டத்தின் அடிப்படையில் இரண்டு அடி விநாயகர் சிலையை வீட்டு வாசலில் வைக்க கூடாது என்று அகற்ற சொல்கிறீர்கள்?

சரி தாராளமாக விநாயகரை எடுத்து செல்லுங்கள் அதற்கு முன்னர் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அனைவரும் மதிக்கவேண்டும், அதனை நிறை வேற்றுவது உங்கள் கடமைதானே என்று கேள்வி எழுப்ப அதற்கு காவல்துறையினர் ஆம் என்று தலையாட்ட அப்போதுதான் காவலர்கள் அதிரும் வண்ணம் கேள்வி எழுப்பினார் சாதனா?

உச்ச நீதிமன்றம் மசூதிகளில் கூம்பு வடிவ ஒலிபெருக்கியை பயன்படுத்த கூடாது என்று தீர்ப்பே சொல்லிவிட்டது அது பல வருடங்களை கடந்தும் விட்டது, ஆனால் இப்போதுவரை தேவகோட்டையில் அதைத்தான் பயன்படுத்துகிறார்கள், இதோ அந்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் நகல் என்று எடுத்து நீட்ட விட்டால் போதுமென்று தெறித்து ஓடி இருக்கிறார்கள் காவலர்கள்.

இந்த சம்பம்தான் தற்போது தேவகோட்டை பகுதிகளில் அதிகம் பேசப்படுகிறது, இனி பிள்ளையார் சிலையை யாரவது அகற்ற நினைப்பார்கள்?

மாவட்ட செய்தி – ரஞ்சித் தேவகோட்டை (TNNEWS24)

Loading...

Trending