Connect with us

#24 Exclusive

தேச துரோகி திருமாவளவனே வெளியேறு வெளுத்து வாங்கிய 10 வயது சிறுமி சாதனா பாதியில் வெளியேறிய பரிதாபம் !

தேவகோட்டை.,

சிறுமி சாதனா 10 வயதிலேயே அரசியலை கற்று தொடர்ந்து பல அரசியல் தலைவர்களை வெளுத்து வாங்கி வருகிறார், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கருதாஊரணி பகுதியில் 15 வயது பள்ளி குழந்தைகளுக்கான பேச்சு போட்டி நடைபெற்றது.

Loading...

இதில் கலந்துகொண்டு பேசிய சிறுமி சாதனாவின் பேச்சு ஒட்டுமொத்த மக்களின் உணர்வுகளையும் தட்டி எழுப்பியது, ஆம் வழக்கம் போல் பேச்சு போட்டியில் பேசும் சிறுவர்கள் காந்தி, நேரு, என் வானம், என் பள்ளி என்று பொதுவான தலைப்பில் பேசுவார்கள் ஆனால் சிறுமி சாதனா தேர்ந்தெடுத்த தலைப்போ ! “370 நீக்கமும் 7 கழுதைகளும் ” என்ற தலைப்பை தேர்ந்து எடுத்து பேசினார். அவர் பேசியது பின்வருமாறு

Loading...

அன்புள்ள தமிழக மக்களுக்கு வணக்கம் நீங்கள் பலரும் கடந்த வாரத்தில் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் என்ன மாற்றம் நடந்தது என்பதை அறிவீர்கள் நான் அதற்குள் போக விரும்பவில்லை, ஆனால் ஒரு 7 நபர்களை நான் கேள்வி கேட்க விரும்புகிறேன் அதில் முதலாவது விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த திருமாவளவன்.

தன்னை தலித் மக்கள் தலைவர் என்று அடையாளப்படுத்திக்கொள்ளும் திருமாவளவனே உனக்கு தெரியுமா காஷ்மீரில் இத்தனை நாட்களாக தலித் சமூகத்தை சேர்ந்த மக்கள் மலம் மட்டும்தான் அள்ளும் தொழில் செய்யவேண்டும் அதனை மீறி அங்கு அவர்கள் வேறு தொழில் செய்தால் குடியுரிமை இல்லை. அதாவது மலம் அள்ளும் கொத்தடிமையாகாத்தான் வாழமுடியும் என்ன படிப்பு படித்தாலும் அங்கு அதுமட்டும்தான் அவர்களுக்கு வேலை.

எங்கே இதை பொதுவெளியில் சொல்லி உன்னால் ஊருக்குள் நுழையமுடியுமா? எப்போது பார்த்தாலும் பாகிஸ்தான் பாசம் தேனி பொம்மிநாயகன் பட்டியில் சொந்த சமுதாய மக்கள் பாதித்த போதுகூட பார்க்க வராமல் ஒருவாரம் கழித்து இரண்டு தரப்பிலும் சமாதானம் பேச வந்தவர் தானே, பக்ரீத் பண்டிகைக்கும், ரம்ஜானுக்கும் கிடைக்கும் ஒரு தட்டு பிரியாணிக்கு நீங்கள் என்னவேண்டுமானாலும் பேசலாம் என்றால் இது ஒன்றும் உங்கள் பாட்டன் வீட்டு சொத்து இல்லை.

தற்போதைய காஷ்மீர் மாநிலம் பாகிஸ்தான் சீனா ஆக்ரமிப்பு காஷ்மீர் முழுவதும் இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் சொந்தம் ஆனால் இந்திய அரசியல் அமைப்பின் படி மக்களவை உறுப்பினராக பொறுப்பேற்று கொண்ட நீ மன்னிக்கவும் நீங்கள் காஷ்மீர் இந்தியாவிற்கு சொந்தமான பகுதி இல்லை என்று சொல்கிறீர்கள் ஆம் உங்களுக்குத்தான் காஷ்மீரில் தலித்துகள் கடைசிவரை மலம் மட்டுமே அள்ளுவது பெரிதாக தெரியாது, காஷ்மீரில் தலித்துகள் அரசு கல்லூரிகளில் படிக்க முடியாது, ஆனால் ஒரு தட்டு பிரியாணிதான் பெரிதாக தெரிகிறது. காஷ்மீர் இந்தியாவின் பகுதி இல்லை என்றும் சொல்லும் உனக்கு இந்தியாவின் எம் பி யாக இருக்க தகுதி இல்லை தேச துரோகியே இந்தியாவை விட்டு வெளியேறு என்று பேச கைதட்டுகள் குவிந்தது,

இனிமேலாவது வளரும் தலைமுறைகள் இவர்களை போன்றவர்கள் வலையில் விழாமல் இந்தியன் என்ற உணர்வோடு வாழவேண்டும் என்ற கணத்த குரலில் பேசினார், சாதனாவின் பேச்சு ஒட்டுமொத்த மக்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது ஆனால் ஒரு தரப்பினர் மட்டும் எதிர்ப்பு தெரிவித்து கோசம் போட அவர்களும் கூட்டத்தினரால் வெளியேற்றப்பட்டார்கள் .

நாம் மதம் இனத்தால் பிரிவடைந்தாலும் இந்தியன் என்ற உணர்வு வேண்டும் என்ற பேச்சு சாதனாவின் குரலில் மட்டுமல்லாமல் மனதிலும் வெளிப்பட்டிருக்கிறது, ஒரு 5-வது படிக்கும் சிறு பள்ளி குழந்தைக்கு உள்ள தேசிய உணர்வு கூட இங்கு பலருக்கு இருப்பதில்லை இனியாவது திருந்துமா தமிழ் சமூகம்.

இதற்கு முன்னர் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சிறுமி சாதனா எழுதிய கடிதம் நம் இணையதளம் மற்றும் பிரபல நாளிதழ்களில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

அவர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தை படிக்க இங்கு கிளிக் செய்யவும்.

Loading...

Trending