வீரமணியை வெளுத்து வாங்கிய சிறுமி சாதனா ! வாழ்த்தும் பிரபலங்கள் தமிழகத்தில் இப்படியும் மாற்றங்கள் உண்டாகிவிட்டதா ?

மதுரை.,

Loading...

மதுரை பேருந்து நிலையத்தை கோபுரவடிவில் அமைக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துவரும் திராவிட கழகத்தலைவர் வீரமணி மற்றும் அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் அரசியல் கட்சி பிரமுகர்களை வெளுத்து வாங்கி இருக்கிறார் 5 ம் வகுப்பு படிக்கும் சிறுமி சாதனா.

முதலில் வீரமணி வெளியிட்ட கண்டன அறிக்கை குறித்து பார்க்கலாம் :-

Loading...

மதுரை – பெரியார் பேருந்து நிலையத்தை
கோவில் கோபுர சின்னத்தில் வடிவமைப்பதா?

பெரியாரைக் கொச்சைப்படுத்தும் வகையிலும்

மதச்சார்பின்மைக்கு விரோதமாகவும் நடந்துகொண்டால் போராட்டம் வெடிக்கும்!

மதுரை மாநகரில் தந்தை பெரியார் பெயரில் பேருந்து நிலையம் 48 ஆண்டுகளுக்குமுன் உருவாக்கப்பட்டது. இந்தப் பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் சுமார் 344 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட திட்டம் தீட்டப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் துணை முதலமைச்சர் மாண்புமிகு ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலும் 20.1.2019 அன்று நடைபெற்றதோடு, அன்றைய நாளே புதிய கட்டுமானத்திற்கான வரைபடமும் வெளியிடப்பட்டது. மீனாட்சியம்மன் கோவில் கோபுர வடிவத்தில் வரைபடமும் வெளிவந்தது. அந்தக் கணமே கடும் எதிர்ப்பு வெடித்துக் கிளம்பியது. அப்படி இருக்காது, மாற்றப்படும் எனக் கூறினர். அத்தோடு இந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்ததாகக் கருதவும்பட்டது. மாநகர ஆணையரும் அதனைத் தெளிவுபடுத்தினார்.

ஏனிந்த திடீர் மாற்றம்?

ஆனால், திடீரென்று நேற்றைய தினம் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி அவர்கள் மதுரை சென்றபோது, கோபுரம் வடிவிலான வரைபடம் அடிப்படையிலேயே மதுரை பெரியார் பேருந்து நிலையம் வடிவமைக்கப்படும் என்ற செய்தி வெளிவந்துள்ளது எவ்வகையில் நியாயம்?

தந்தை பெரியாரைக் கொச்சைப்படுத்துவதா?

இதற்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் கண்டிக்கப்படத்தக்கவர்களேயாவார்கள். தந்தை பெரியார் பெயரில் நிர்மாணிக்கப்பட்ட ஒரு பேருந்து நிலையத்தை, கோவில் கோபுர வடிவத்தில் அமைப்பது எந்த வகையில் சரியானதாகும்? தந்தை பெரியாரைக் கொச்சைப்படுத்துவதோடு அல்லாமல், அப்படி வைக்கப்படும் கோவில் கோபுரமும் காலாகாலத்திற்கும் வீண் சர்ச்சைக்கும், வெறுப்புக்கும் உரியதாகவே ஆகும் என்று எச்சரிக்கிறோம்.

மதச்சார்பற்ற அரசின் வேலையாக இருக்கலாமா?

அண்ணாவின் பெயரையும், ‘திராவிட’ கலாச்சாரப் பெயரையும் கட்சியில் வைத்துக்கொண்டும், தந்தை பெரியார் பெயரையும் ஒரு பக்கத்தில் உச்சரித்துக் கொண்டும், சுவரொட்டிகளில் அவர் உருவத்தைப் பொறித்துக் கொண்டும், இன்னொரு பக்கத்தில் இவைகளுக்கு முற்றிலும் முரண்பாடாக அ.தி.மு.க. அரசு நடந்துகொள்வது கேலிக்குரியதேயாகும்.

மதச்சார்பற்ற அரசு கோவில் கோபுரத்தை நாடிச் செல்லலமா?
இன்னொரு வகையில் ஒரு மதச்சார்பற்ற அரசில், அரசுக்குச் சொந்தமான நிறுவனத்தில் மத அடையாளத்தைப் புகுத்துவது சட்டப்படியும் தவறான ஒன்றே.
தமிழ்நாடு அரசு இதுபோன்ற வீண் வேலைகளில் ஈடுபடாமல் நாட்டுக்கு மிகவும் தேவையான வளர்ச்சிப் பணிகளில் நாட்டம் செலுத்துவதே நல்லது.

போராட்டம் வெடிக்கும் எச்சரிக்கை!

இல்லையெனில் மதச்சார்பற்ற சக்திகள், கட்சிகளை ஒன்றிணைத்துக் கடும் போராட்டத்தை நடத்திடும் நிலை ஏற்படும் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.

பாரதீய ஜனதா, ஆர்.எஸ்.எஸ். பின்னணியிலேயே பெரியார் பேருந்து கோபுரச் சின்னத்தைத் திணிக்கும் வேலையில் அ.இ.அ.தி.மு.க. அரசு ஈடுபடுகிறது என்றே பெரும்பாலான மக்கள் கருதும் நிலை ஏற்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

குளவிக்கூட்டில் கை வைக்கவேண்டாம்; வேண்டாத வேலையிலும் அ.தி.மு.க. அரசு ஈடுபட வேண்டாம் – எச்சரிக்கை!

சிறுமி சாதனா கேள்வி?

இவ்வாறு திராவிட கழகத்தலைவர் வீரமணி அறிக்கை ஒன்றிணை வெளியிட்டதோடு மட்டுமல்லாமல் ஊடகங்களில் பேட்டி கொடுத்து கடுமையாக எதிர்த்து வருகிறார். இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த சிறுமி சாதனா திராவிட கழகத்தலைவர் வீரமணியை நோக்கி எழுப்பிய கேள்விகள் வைரலாகி வருகிறது.

திரு வீரமணி அவர்களுக்கு வணக்கம் தங்கள் அளவிற்கு அரசியல் அனுபவமோ வயதோ, இல்லை என்றாலும் இதுவரை உங்களின் நடவடிக்கைகளை எனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பேசியதை வைத்து அறிகிறேன்.

சங்கம் வளர்த்த மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் கோபுர வடிவில் மதுரை பேருந்து நிலையத்தை அமைக்க கூடாது என்று கூறுகிறீர்கள் கேட்டால் அப்படி வைத்தால் கடவுள் நம்பிக்கையற்ற பெரியாரை அவமான படுத்தும் செயல் என்று சொல்கிறீர்கள்.

சரி இதுபோல் ஸ்ரீரங்கம் கோவிலின் வாசலில் பெரியார் சிலையை ஏன் திறந்தீர்கள் இந்துக்களின் புனித தலமான ஸ்ரீரங்கம் கோவிலின் முன்பு நாத்திகரான பெரியார் அமைந்த காரணம் என்ன பிச்சை எடுக்கவா?

மேலும் மதசார்பற்ற அரசாங்கம் எப்படி கோவில் கோபுரம் வடிவில் பேருந்து நிலையத்தை அமைக்கலாம் என்று கேட்கிறீர்கள் சரியான கேள்வி, இதே கேள்வியை மதசார்பற்ற அரசாங்கம் இந்துக்களின் கோவில் பணத்தை எடுத்து உங்களை போன்ற ஓசி சோறு என்று புகழ் பெரும் நபருக்கு செலவு செய்கிறதே அதை ஏன் நீங்கள் மறுக்கவில்லை.

மேலும் இதே அரசாங்கம் கிறிஸ்துவர்களின் ஜெருசலம் பயணம் இஸ்லாமியர்களின் மெக்கா பயணம் போன்றவற்றிற்கு பண உதவி அளிக்கிறது அதை பற்றியெல்லாம் ஏன் நீங்கள் வாய் திறப்பதில்லை?

சரி வேளாங்கண்ணி ரயில் நிலையம், நாகூர் பேருந்து நிலையங்கள் எந்த வடிவில் அமைக்கப்பட்டுள்ளன, இது பற்றி உங்களுக்கு தெரியுமா? முதலில் இவை அனைத்திற்கும் பதில் சொல்லிவிட்டு மதுரை பேருந்து நிலைய வடிவத்தை எதிருங்கள் !

நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் மக்கள் எப்போதும் அமைதியாக கேட்டுக்கொண்டு இருக்கமாட்டார்கள் ! காலம் மாறிவிட்டது இப்போது பழைய காலத்தை போன்று பிள்ளையார் சிலைகளை தெருவில் உடைத்தால், உடைத்தவனும் சேர்ந்து உருளவேண்டியிருக்கும் என்பதனை நினைப்படுத்துகிறேன்.

இப்படிக்கு.
பா. சாதனஸ்ரீ
31.08.19
தேவகோட்டை.

இவ்வாறு சிறுமி சாதனா வீரமணிக்கு எழுதிய கடிதத்தை தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டது மட்டுமல்லாமல் ஊடகங்களுக்கும் அனுப்பியுள்ளார், இந்த கடிதம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது, மேலும் தமிழகத்தில் சிறுவர், சிறுமியர் கூட பெரியாரிஸ்ட்களின் பித்தலாட்டத்தை வெளுத்து வாங்கி வருவதாக பாஜக தேசிய செயலாளர் h ராஜா போன்றோர் சிறுமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் சாதனாவிற்கு சமூகவலைத்தளங்களில் பலரும் தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3882 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*