உச்சநீதிமன்றம் அதிரடி நாத்திகவாதிகள், பயங்கரவாதிகள் என இரண்டு தரப்பிற்கும் ஆப்பு !

உச்சநீதிமன்றம் அதிரடி நாத்திகவாதிகள், பயங்கரவாதிகள் என இரண்டு தரப்பிற்கும் ஆப்பு !

மதவழிபாட்டு தளங்களுக்கு நன்கொடையாக பெறப்படும் பணம் பயங்கரவாதத்திற்கு செல்கிறதா என்பதனை கண்காணிக்கவும், மாற்று மதத்தினர் மற்றும் மதமற்றவர்கள் அடுத்த மதம் உரிமைகளில் தலையிடுவது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சபரிமலை உள்பட பல்வேறு வழிபாட்டுத் தலங்களில் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகள் தொடா்பான மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான 9 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமா்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமா்வு முன் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, மத்திய அரசு சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா முன்வைத்த வாதம்:
அரசமைப்புச் சட்டத்தின் 25 மற்றும் 26-ஆவது பிரிவுகளின்படி, அனைவருக்கும் மதச் சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், அந்தச் சுதந்திரமானது, பொது அமைதி, நெறிமுறைகள், சுகாதாரம் ஆகியவற்றுக்கு கட்டுப்பட்டதாக இருக்க வேண்டும்.
இதில், இரண்டு விஷயங்களை நீதிமன்றங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். முதலாவது விஷயம், ஒரு மதத்தில் பின்பற்றப்படும் வழிபாட்டு முறைகள், சடங்குகள், விழாக்கள் ஆகியவை பற்றியது. இரண்டாவது விஷயம், ஒரு மதத்தில் பின்பற்றப்படும் குறிப்பிட்ட சடங்கு முக்கியமானதா? இல்லையா? என்று முடிவு செய்யப்பட வேண்டும். மேலும், அந்த வழிபாட்டு முறையை முடிவு செய்வது நீதிமன்றமா? அல்லது சம்பந்தப்பட்ட மதத்தைச் சோ்ந்தவா்களா? என்றும் முடிவு செய்யப்பட வேண்டும்.

Loading...

மேலும், சபரிமலையின் பக்தா்களின் வழிபாட்டு உரிமையை வரையறுப்பது விசாரணையில் முக்கியப் பகுதியாக இருக்க வேண்டும் என்றாா் அவா். அதைத் தொடா்ந்து, நீதிபதிகள் கூறியதாவது:
கோயில்களுக்கும் இதர வழிபாட்டுத் தலங்களுக்கும் நன்கொடை அளிப்பது சடங்கின் ஒரு பகுதியாக இருக்கலாம். ஆனால், அந்த வழிபாட்டுத் தலத்தின் அறக்கட்டளை, நன்கொடையை தவறாகப் பயன்படுத்துமானால், அதை சட்டத்தால் முறைப்படுத்த முடியும் என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.
ஒரு மதத்தின் வழிபாட்டு முறைகள் மற்றும் சடங்குகள் குறித்து அந்த மதத்தைச் சாராதவா் கேள்வி எழுப்புவதற்கு முகாந்திரம் இருக்கிா என்பது குறித்தும் கேள்வி எழுந்துள்ளது. இந்த விவகாரத்தையும் உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.

Loading...

தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து நன்கொடையாக பெறப்படும் பணங்களை இந்தியாவில் பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்துவதாகவும், அதன் மூலம் இந்தியாவில் பல்வேறு பயங்கரவாத சம்பவங்கள் நடைபெறுவதாகவும் எனவே பணம் வரவை கண்காணிக்க மத்திய அரசு 2015-ம் ஆண்டே திட்டமிட்டது அதன் எதிரொலியாக தடை பட்டுள்ளது.

மேலும் நாத்திகர்கள் என்ற போர்வையில் சிலர் இந்து மதம் உரிமைகளில் தலையிடுவதும் தொடர்ந்து விமர்சனங்கள் செய்வதும் வழக்கு தொடர்வதும் போன்ற சம்பவங்கள் அரங்கேறுகின்றன, சபரிமலையில் முஸ்லீம், கிறித்தவ மதத்தை சேர்ந்த பெண்கள் செல்வேன் என்று வீம்பு பிடித்த நிலையில் அதுகுறித்து விசாரணை நடத்தி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் எனவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அதே வேலையில் பயங்கரவாத செயல்களுக்கு பணத்தினை பயன்படுத்துபவர்களுக்கும், அடுத்த மதம் சார்ந்த உரிமைகளில் மூக்கினை நுழைப்பவர்களுக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

©TNNEWS24

Loading...

Tnnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *