பார்ப்பனர் என திட்டிய நபர் தான் என்ன சாதி என கொடுத்த பதிலடி சத்யகுமார் !!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தமிழக ஊடகங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன, இந்நிலையில் பொருளாதார நிபுணரும், அரசியல் விமர்ச்சகருமான சத்யகுமார் தன்னுடைய அனுபவங்கள் குறித்து வீடியோ வெளியிட்டார்.

Loading...

அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் சத்யகுமாரை பிராமணர் என்றும் கடுமையான சொற்களை பயன்படுத்தி விமர்சனம் செய்திருந்தார், அதற்கு பதில் அளிக்கும் விதமாக சத்யா தனது தரப்பு விளக்கங்களை கொடுத்திருக்கிறார், பின்வருமாறு :-

என்னை “பார்ப்பான்” என்று விமர்சிக்கும் திமுக ஆதரவாளர்களுக்குக் கூறுகிறேன்: நான் பிராமணன் அல்ல. நான் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, கடுமையாக உழைத்து, நன்கு படித்து வாழ்க்கையில் முன்னேறி வந்தவன். என் தாத்தா தென்னிந்தியாவின் விவசாயச் சங்கத்தின் மிகவும் மதிக்கத்தக்கத் தலைவராக இருந்தவர். அவர் மக்களுக்காகவும் விவசாய துறையின் எழுச்சிக்காகவும் போராட்டங்களில் ஈடுபட்டுப் பல முறை சிறைக்குச் சென்றவர் என்று நீ புரிந்துகொள்!

Loading...

எங்கள் குல தெய்வத்திற்கு சிக்கன், மட்டன், என்று பலவிதமான இறைச்சி உணவு வகைகள் படைத்து விட்டு அதை உண்டு வணங்கும் பழக்கம் கொண்டவர்கள் தான் நாம். திமுகவை ஆதரிப்பவர்களுக்கு மட்டும் என்னைப் பிராமணன் என்று வர்ண சாயம் பூசுவது ஏன்? இது நியாயமா?

ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள், என் குடும்பத்தில் திமுகவை ஆதரிப்பவர்கள் இருப்பினும், கொள்கை மற்றும் தர்மத்தின் அடிப்படையில் நான் திமுகவை எதிர்க்கிறேன். அதுமட்டுமல்ல, நான் வர்ணாஷ்ரம தர்மத்தை ஏற்காதவன். ஹிந்து மதம் என்பது வெறும் வர்ணாஷ்ரம தர்மம் மட்டும் அல்ல. சுவாமி விவேகானந்தரை பின் தொடர்பவனாக, அவரைப் போலவே வர்ணாஷ்ரம தர்மத்தை நான் என்றும் ஆதரிப்பவன் அல்ல!

எல்லோரிடமும் தெய்வீகம் உள்ளது என்று கூறிய சுவாமி விவேகானந்தர் வழியில் பயணிப்பவன் நான். கடினமாக உழைத்து, என் படிப்பை மட்டுமே நம்பி வாழ்வில் முன்னேறி இருக்கிறேன், என்றும் வர்ணம் ஜாதி என்பதைப் பிடித்து முன்னேறவில்லை! அண்ணல் அம்பேத்கர் போன்று நான் B.Com, LLB, ACA, ACMA, CS, CIMA-ACMA (UK), CGMA (US) என்று உயர்ந்த பட்டங்கள் பெற்று கடும் உழைப்பால் உயர்ந்தவன், உன் தலைவன் ஸ்டாலின்/உதயநிதி போலப் பிறப்பால் பெருமை தேடி உயர்ந்தவன் நான் அல்ல!

ஆனால், இன்றும் ஜாதிய ஏற்றத்தாழ்வு பேச்சைத் தொடர்ந்து பரப்பி வருவது திமுக தலைவர் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் தான். இது நியாயமா? முதலில் நீங்கள் உங்கள் தளபதி ஸ்டாலின் அவர்களைத் தான் கேள்வி கேட்க வேண்டும்! எல்லா மதங்களிலும் ஏற்றத் தாழ்வுகள் இருக்கின்றன. ஆனால், ஹிந்து மதத்தில் மட்டும் தான் அதை நிராகரித்த பிறகும் ஒருவர் ஹிந்துவாக இருக்க முடியும். மற்ற மதங்களில் அவ்வாறு இருக்க முடியாது. இதை முதலில் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். என்று குறிப்பிட்டுள்ளார்.

சாதியை ஒழிக்க ஆரம்பித்த இயக்கம் என கூறப்பட்ட இயக்கங்கள் இப்போது யார் என்ன சாதி என ஆராய்ந்து வருவது ம் இதற்கு முன்னர் சுப வீரபாண்டியன் பாண்டேவின் சாதி குறித்து பேசி சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3930 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*