Connect with us

#24 Exclusive

தமிழகத்தில் உருவாகிறது சேட்டிலைட் சிட்டி அப்படி என்றால் என்ன தெரியுமா?

தமிழகத்தில் உருவாகிறது சேட்டிலைட் சிட்டி அப்படி என்றால் என்ன தெரியுமா?

தமிழகத்தில் வீட்டு வசதித்துறை சார்பில் சேட்டிலைட் சிட்டி அமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு முதல்வர் அறிவித்தார். அதனை தொடர்ந்து வீட்டு வசதித்துறை சார்பில் தமிழக துணை முதல்வர் ஓ பி எஸ் ஆய்வு மேற்கொண்டார். சேட்டிலைட் சிட்டி என்பது கிராமம் நகரம் மாநகரம் ஆகியவற்றின் தோற்றத்தை ஒரே பகுதியில் கொண்டுவந்து அமைப்பதாகும், இதன்மூலம் மாநிலத்தின் முன்மாதிரி பகுதியாக சேட்டலைட் சிட்டி தோற்றம் அளிக்கும்.

இது குறித்து துணை முதல்வர் ஓ.பி.எஸ் தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு :-

Loading...

திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி வட்டம், குத்தம்பாக்கம், பர்வதராஜபுரம், செம்பரம்பாக்கம், நரசிங்கபுரம் மற்றும் வெள்ளவேடு ஆகிய ஐந்து கிராமங்களில் அடங்கிய 1694.98 ஏக்கர் நிலங்கள் திருமழிசை துணைக்கோள் நகரம் அமைக்க தேர்வு செய்யப்பட்டு, அதில் 466.49 ஏக்கர் நிலங்களுக்கு தீர்வாணை பகரப்பட்டது. அவ்வாறு தீர்வாணை பகரப்பட்ட 466.49 ஏக்கர் நிலங்களில் 310.42 ஏக்கர் நிலங்கள் 12.08.2003 முதல் 06.08.2009 வரையில் வாரியம் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. அதேபோல் 12.65 ஏக்கர் அரசு நிலங்கள் 13.06.2013-ல் வாரியத்திற்கு நில உரிமை மாற்றம் செய்யப்பட்டு 13.11.2011 அன்று ஒப்படைப்பு செய்யப்பட்டது.

Loading...

முதலமைச்சர் 08.09.2011 அன்று சட்டமன்ற விதி 110-ன் கீழ் திருமழிசை துணைக்கோள் நகரம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் செயல்படுத்தப்படும் என சட்டமன்றத்தில் அறிவித்தார்.வீட்டு வசதி (ம) நகர்புற வளர்ச்சித்துறை அரசாணையின்படி சுமார் 12,000 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

முதற்கட்டமாக பகுதி -1 துணைக்கோள் நகர திட்டத்தினை குத்தம்பாக்கம், செம்பரம்பாக்கம் மற்றும் பர்வதராஜபுரம் ஆகிய மூன்று கிராமங்களில் ஒப்படைப்பு செய்யப்பட்ட 121.07 ஏக்கர் நிலங்களுடன் சில அரசு புறம்போக்கு நிலங்களையும் சேர்த்து ஆக மொத்தம் 122.99 ஏக்கர் நிலங்களில் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டது.மேற்படி அணுகுசாலையை பயன்படுத்தி துணைக்கோள் நகரம் பகுதி -1 திட்டத்திற்கான உட்பிரிவு மனை வரைபடமானது 7 தொகுப்புகள் கொண்ட பன்னடுக்கு மாடி குடியிருப்புகளாகவும் மற்றும் 1 தொகுப்பு பன்னடுக்கு வணிக வளாகமாகவும் தயாரிக்கப்பட்டு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் ஒப்புதல் 07.12.2016 –ல் பெறப்பட்டுள்ளது.
மனை மேம்பாட்டு திட்டப்பணிகள் மேற்கொள்ள ரூ.245.70 கோடி மதிப்பீட்டில் வாரியத்தின் நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டு மேம்பாட்டு பணிகள் 17.02.2016 அன்று துவங்கப்பட்டு 31.12.2018-ல் முழுவதும் முடிக்கப்பட்டு விட்டது.தாழ்வான பகுதிகளில் மண் நிரப்பும் பணி, தடுப்புச் சுவர் – 3.75 கி.மீ., பாலம் – 0.09 கி.மீ., சாலை மற்றும் வடிகால் வாய்க்கால் 3.82 கி.மீ., 240 தெரு விளக்குகள், 20 ஆழ்துளை கிணறுகள், 8 கீழ்நிலை நீர் தேக்க தொட்டிகள், 2 கழிவு நீர் சேகரிப்பு தொட்டிகள் மற்றும் 3.48 கி.மீ. பாதாள கழிவு நீர் குழாய்கள் என மனை மேம்பாட்டு பணிகளின் விவரங்கள் ஆகும்.
திருமழிசை துணைக்கோள் நகரத்திட்டம் பகுதி-1ன் செய்யத்தக்கமைக்கான அறிக்கையினை பொது மற்றும் தனியார் பங்களிப்பு, கூட்டு முயற்சி திட்டத்தின் மூலம் இரண்டாம் நிலையில் நிறைவேற்றும் பொருட்டு தமிழ்நாடு உட்கட்டமைப்பு வளர்ச்சி கழகத்தின் பட்டியலில் உள்ள கலந்தகுரியர் M/s Crisil Infrastructure Advisory என்ற தனியார் நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
9513 வீடுகளின் திட்டப்பணிகள் நான்கு கட்டமாக கட்டப்படவுள்ளது. இதில் முதற்கட்டமாக 3710 வீடுகள், 3516 வீடுகள் இரண்டாவது கட்டமாகவும், 2217 வீடுகள் மூன்றாம் கட்டமாகவும், நான்காம் கட்டம் வணிக வளாகமும் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

Loading...

Trending