Connect with us

சினிமா

இவர்கள்தான் ஹீரோஸ் – மலையாள ரீமேக் படத்துக்கு சரியான தேர்வா ?

இவர்கள்தான் ஹீரோஸ் – மலையாள ரீமேக் படத்துக்கு சரியான தேர்வா ?

மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற அய்யப்பனும் கோஷியும் எனும் திரைப்படம் இப்போது தமிழில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது.

பிருத்விராஜ் மற்றும் பிஜு மேனன் இணைந்து நடித்த அய்யப்பனும் கோஷியும் எனும் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும் அத்திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகி தமிழ்நாட்டிலும் கவனம் ஈர்த்தது. ஒரு போலிஸ் அதிகாரிக்கும் ஓய்வு பெற்ற ராணுவ வீரனுக்கும் போலிஸ் அதிகாரிக்கும் இடையே எழும் ஈகோ மோதலில் ஏற்படும் விளைவுகளே கதை.

Loading...

இந்நிலையில் இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை ஆடுகளம், ஜிகர்தண்டா ஆகிய படங்களின் தயாரிப்பாளர் பைவ்ஸ்டார் கதிரேசன் வாங்கியுள்ளார். இதில் பிருத்விராஜ் மற்றும் பிஜு மேனன் கதாபாத்திரங்களில் நடிக்கப்போவது யார் என்ற விவரம் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

Loading...

இந்நிலையில் பிருத்விராஜ் மற்றும் பிஜுமேனன் அந்த கதாபாத்திரங்களில் சசிகுமாரும், சரத்குமாரும் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் ரசிகர்களோ அஜித்-ரஜினி அல்லது அஜித்- கமல் ஆகியோர் நடித்தால் சிறப்பாக இருக்கும் எனக் கருத்து தெரிவித்து வந்தனர்.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending