Connect with us

#24 Exclusive

ரஜினியுடன் அரசியல் களத்தில் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி உண்மை என்ன?

Published

on

சமூகவலைத்தளம்.,

தீபாவளி, பொங்கல் போன்ற முக்கிய பண்டிகைகளின் போது புது படங்கள் வெளியாகிறதோ இல்லையோ சரியாக ஒரு மாதத்திற்கு முன்பே சரவணா ஸ்டோர் அண்ணாச்சி அருள் நடிப்பில் முன்னணி நடிகைகளுடன் விளம்பரம் வெளியாகி அனைவரையும் கவர்ந்து விடும்.

ஆரம்பத்தில் பலரும் அவரது விளம்பரங்களை கிண்டல் செய்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் அவரது விளம்பரங்களை மக்கள் ஏற்று கொண்டு விட்டார்கள், இந்நிலையில்தான் அண்ணாச்சி நடிப்பில் 50 கோடி ரூபாய் செலவில் தமிழ்ப்படம் ஒன்று ரெடி ஆகிவருவதாகவும், அதில் முன்னணி நடிகைகளை நடிக்க வைக்க அண்ணாச்சிக்கு என்று விளம்பரத்தை தயாரித்து கொடுக்கும் ஜேடி – ஜெரி நிறுவனம் தரப்பில் முயற்சிகள் நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகிவந்த சூழலில்.,

அண்ணாச்சியின் அரசியல் பிரவேசம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது, ரஜினியின் அரசியல் அறிவிப்பு குறித்து அடுத்தடுத்த அப்டேட்களை சொல்லி கொண்டிருக்கும் மனோஜ் செந்தில்குமார் , சொல்லிய தகவல்கள் தற்போது இணையத்தில் பரவலாக பேசு பொருளாக மாறியுள்ளது, சட்டமன்ற தேர்தலை சந்திப்பேன் என்று நடிகர் ரஜினி சொல்லிவிட்டு அமைதியாக செல்கிறார், என்று பலரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள் ஆனால் சத்தமில்லாமல் தனது ரசிகர் மன்றத்தை வைத்து கிராமங்கள் வரை தகுதியான நிர்வாகிகளை தேர்வு செய்து அவர்களுடன் தொடர்பில் இருக்கிறார் ரஜினி என்றும், கட்சியின் பெயர், கொடி அனைத்தும் முடிவாகிவிட்ட நிலையில் சித்திரையில் கட்சியின் பெயர், கொடி அறிமுகப்படுத்தபட்டு முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மனோஜ் சொல்லிய மற்றொரு தகவல்தான் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது, ஒரு இயக்கம் தற்போதைய காலத்தில் வெற்றி அடைய வேண்டும் என்றால் அதற்கு நிச்சயம் பணம் தேவை, பணம் இருந்தால் மட்டுமே மிக பெரிய பண பலம் கொண்ட திமுக, அதிமுக ஆகிய கட்சிகளை தமிழகத்தில் எதிர்த்து போட்டியிட முடியும், அந்த வகையில் சரவணா ஸ்டோர் அருள் அண்ணாச்சி, தலைவருடன் பல காலமாக தொடர்பில் இருக்கும் மிக முக்கிய நண்பர், அவர் கட்சியில் இணைவதுடன், இயக்கத்திற்கு பக்க பலமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இனி என்ன “அண்ணாச்சியே நம்ம பக்கம்தான்” என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

இந்த தகவல் தற்போது தீயாக பரவி வருகிறது, இது குறித்து அதிகார பூர்வ தகவல் வெளியாகாத நிலையில் இந்த தகவலின் உண்மை தன்மை என்னவென்று தெரியவில்லை, இருப்பினும் ரஜினியின் அரசியல் பிரவேசம், ரசிகர்கள் சந்திப்பு உள்ளிட்டவை குறித்து ‘மனோஜ்’ சரியாக முன்பே தெரிவித்த காரணத்தினால் இது உண்மையாக இருக்கலாம் என்று ரஜினி ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. இதுகுறித்த உறுதியான தகவல்கள் சரவணன் அருள் அவர்களிடம் இருந்தோ அல்லது ரஜினி தரப்பிடம் இருந்தோ கிடைத்தால் மட்டுமே உறுதி செய்யப்படும்.

எது எப்படியோ ரஜினி அரசியல் களத்திற்கு வரும்போது முழுமையான திட்டமிடல், நோக்கம் ஆகியவற்றை முடிவு செய்த பிறகே கட்சியின் பெயரை அறிவித்து அரசியல் களத்தில் இறங்குவார் என்று சொல்லிய நிலையில் அண்ணாச்சியின் வருகை அதனை உறுதி செய்யும் என்றே நம்ப படுகிறது.

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com

Share