செருப்பு மாலை அணிவிப்பு விவகாரம் உடனடியாக தண்டிக்க ராமதாஸ் வலியுறுத்தல்

காமராசர் சிலைக்கு செருப்பு மாலை
அணிவித்தோரை தண்டிக்க வேண்டும்! என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றிணை வெளியிட்டுள்ளார் இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை பிணவருமாறு :-

Loading...

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் உள்ள பெருந்தலைவர் காமராசர் சிலைக்கு சமூக விரோதிகள் சிலர் செருப்பு மாலை அணிவித்துள்ளனர். இந்த அநாகரிக செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.
தமிழ்நாட்டில் சிலை வைக்கப்பட்டுள்ள தலைவர்கள் அனைவரும் அவர்கள் வாழ்ந்த காலத்தில் தமிழகத்தின் சமூக, கல்வி, பொருளாதார, பண்பாட்டு, கலை வளர்ச்சிக்கு பல்வேறு வழிகளில் பங்களித்துள்ளனர்;

நாட்டின் விடுதலைக்காக போராடி, தியாகங்களை செய்துள்ளனர்; சமூகத்தில் நிலவிய மூடநம்பிக்கை மற்றும் வெறுக்கத்தக்க வழக்கங்களை ஒழிக்க போராடியுள்ளனர். அதற்காக அவர்களுக்கு மரியாதை செய்யும் நோக்கத்துடன் தான் அவர்களுக்கு சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைவருக்கும் பொதுவான அவர்கள் மதிக்கப்பட வேண்டியவர்களே தவிர, அவமதிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல.

Loading...

பெருந்தலைவர் காமராசர் தமிழ்நாட்டில் ஏராளமான பள்ளிகளை திறந்தும், மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்தும் கல்வி வளர்ச்சிக்கு வித்திட்டவர். ஊழலற்ற நல்லாட்சி வழங்கியதுடன், தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்காக ஏராளமான பொதுத்துறை நிறுவனங்களை கொண்டு வந்தவர். அத்தகையவரின் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்தோர் குரூரமான மனநிலை கொண்டவர்களாகவே இருக்க வேண்டும்.

திருவில்லிபுத்தூரில் காமராசர் சிலைக்கு மாலை அணிவித்தவர்கள் யார்? என்பதைக் கண்டறிந்து அவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும். இனிவரும் காலங்களில் இத்தகைய நிகழ்வுகள் நடக்காததை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு தனது அறிக்கையில் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*