வீட்டில் உப்பு தீபம் ஏற்றலாமா? நல்லதா?

வீட்டில் உப்பு தீபம் ஏற்றலாமா? நல்லதா?

Loading...

உப்பு என்றல் அது மஹாலக்ஷ்மியின் சுயரூபம் ஆகும்.கடலில் இருந்து தோன்றிய மகாலட்சுமியின் அம்சமாக ‘உப்பு’ சொல்லப்படுவதால் தான், உப்பைச் சிந்தக் கூடாது’ என்று நம் முன்னோர்கள் சொல்லிவைத்தனர். இந்த உப்பைக் கடனாகக் கொடுக்கக் கூடாது’ என்பது இன்றும் உள்ள வழக்கம் ஆகும். அப்படி கொடுப்பதன் மூலம் வீட்டில் உள்ள செல்வம் குறைந்து விடும் என்பதாகும். இந்த புனித தன்மை வாய்ந்த உப்பினை பெருமை படுத்துவதற்காகத் தான் நாம் உப்பு தீபம் ஏற்றவேண்டும்.

இதனால் வீட்டில் மஹாலக்ஷ்மி வரும்.மற்றும் செல்வ வளம் பெருகும். உப்பு ஒரு மஹாலக்ஷ்மி அதன் மீது நாம் தீபம் ஏற்றலாம் என்ற கேள்வி எழும். நம்முடைய முன்னோர்கள் கண் திருஷ்டி கழிப்பதற்காக இரண்டு கைப்பிடி அளவு உப்பினை எடுத்து அதனை சுற்றி பின் அதை நெருப்பில் போட்டு விடுவார்கள்.அந்த உப்பு நெருப்பில் வெடித்து அது எரிந்து விடும். அப்படி இருக்கையில் உப்பின் மேல் விளக்கேற்றுவது தவறான செயல் ஆகாது. உப்பிற்கு கெட்ட சக்தியை அளிக்கும் தன்மை உள்ளது.எனவே தான் அதனை

Loading...

வீட்டில் திருஷ்டி சுற்றி எரிக்க பயன்படுத்துகின்றனர்.இந்த உப்பின் மேல் தீபம் ஏற்றி வழிபடுவதால் நம் வீட்டில் உள்ள கெட்ட சக்திகள் அகன்று நல்ல சக்தி உள்ளே வரும். இந்த உப்பு தீபம் ஏற்றும் முறை எப்படி இருக்க வேண்டும் என்றால், வீட்டில் ஒரு செம்பு அல்லது பித்தளை தாம்பூலத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.அந்த தாம்பூலத்தை மஞ்சள் குங்குமம் இட்டு அலங்கரிக்க வேண்டும். பிறகு

அந்த தாம்பூலத்தில் உப்பினை எடுத்துக்கொள்ள வேண்டும்.பின் அதன் உப்பின் மேல் வைக்கும் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி விளக்கினை இரண்டு திரி வைத்து எறிய வைக்க வேண்டும். இந்த உப்பு தீபத்தினை வாசனை பூக்களால் ஆன மல்லிகை மற்றும் தாமரை பூக்களை கொண்டு அலங்கரித்தல் இன்னும் சிறப்பாக இருக்கும். வாசனை இல்லாத பூக்களை கொண்டு அலங்கரித்தல் கூடாது. இந்த விளக்கினை உங்கள் வீட்டு பூஜை அறையில் ஏற்ற வேண்டும். அல்லது வீட்டின் தென்மேற்கு அல்லது வடகிழக்கு

மூலையில் கிழக்கு பார்த்தபடி அந்த விளக்கினை ஏற்ற வேண்டும். அதாவது தீபத்தின் சுடர் கிழக்கு நோக்கி இருக்க வேண்டும். இந்த விளக்கினை தினமும் ஏற்றலாம். அல்லது வாரத்திற்கு ஒருமுறை வெள்ளிக்கிழமை அன்று ஏற்றலாம். காலை ஆறு மணி அல்லது மாலை ஆறு மணிக்கு ஏற்ற வேண்டும். அப்படி வெள்ளிக்கிழமை ஏற்ற முடியாதவர்கள் மாதத்திற்கு ஒரு முறை வரும் பௌர்ணமி

நாட்களில் இந்த விளக்கினை ஏற்றி வழிபடலாம். இந்த விளக்கினை ஏற்றுவதன் மூலம் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். இந்த உப்பு கண் திருஷ்டிகள் நீங்கி கெட்ட சக்திகளை நம் வீட்டில் நெருங்காது. இந்த விளக்கினை ஏற்றி நெய் வைத்தியம் செய்து வழிபடுவது இன்னும் சிறந்தது. உப்பு தீபம் ஏற்றுவதால் உண்மையில் நம்மை எதிர்நோக்கி வரும் துன்பங்கள் யாவும் உப்பைப்போல கரைந்துவிட வேண்டும் என்பதன் பொருளாகும். இந்த செடி உங்கள் வீட்டில் உள்ளதா? அப்போ நீங்கள் தான் பணக்காரர்!!

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*