இனி சேலத்திலும் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் புதிய கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்த எடப்பாடி பழனிச்சாமி , ராகுல் டிராவிட் உறுதி

இந்தியாவில் கிரிக்கெட் என்பது ஒரு மாதமாக உள்ள சூழலில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் கிரிக்கெட் மைதானங்கள் எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளது . சென்னை சேப்பாக்கம் மைதானம் மட்டுமே தமிழகத்தில் உள்ள சர்வதேச மைதானம் அதை தாண்டி திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் ஒரு மைதானம் உள்ளது

Loading...

ஆனால் அதில் TNPL உள்ளிட்ட உள்ளூர் போட்டிகள் மட்டுமே நடத்தப்படுகிறது . சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் அமரும் இருக்கைகளில் பாதி இருக்கைகளில் பொதுமக்கள் அமர தடை உள்ளது . இந்நிலையில் சேலம் மாவட்டம் வாழப்பாடியில் சென்னை கோவை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டர் தொலைவில் புதிதாக சர்வதேச தரத்தில் 16 ஏக்கரில் ஒரு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது

அந்த மைதானத்தை இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் ஆகியோர் இன்று திறந்துவைத்தனர் . இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கமணி , செங்கோட்டையன் , பெஞ்சமின் உள்ளிட்டோரும் , தமிழக கிரிக்கெட் சங்க தலைவர் ரூபா குருநாத் , முன்னாள் பிசிசிஐ தலைவரும் சிஎஸ்கே அணியின் உரிமையாளரும் ஆன சீனிவாசன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர் .

Loading...

மலைகள் சூழ இயற்க்கை எழில் கொஞ்சும் சூழலில் அமைந்துள்ள இந்த மைதானம் வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்று கூறிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த மைதானத்தில் விரைவில் ரசிகர்கள் அமரும் கேலரிகள் மற்றும் பிற வசதிகளும் செய்யப்பட்டு ஐபிஎல் போட்டிகளை இங்கும் நடத்த தேவையான அணைத்து உதவிகளையும் அரசு செய்யும் என்று கூறினார்

பின்னர் பேசிய பிசிசிஐ முன்னாள் தலைவரும் சென்னை அணியின் உரிமையாளரும் ஆன சீனிவாசன் அணைத்து வசதிகளும் துரிதமாக செய்யப்பட்டு விரைவில் தோனி தலைமையில் சிஎஸ்கே அணி இங்கு ஐபிஎல் போட்டியை விளையாடும் என்று கூறினார் . இது கிரிக்கெட் ரசிகர்கள் பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*