Connect with us

#24 Exclusive

பவுண்டரி முறை நீக்கம் சச்சின் சொன்ன கருத்தால் இங்கிலாந்து அதிருப்தி !

Published

on

பவுண்டரி முறை நீக்கம் சச்சின் சொன்ன கருத்தால் இங்கிலாந்து அதிருப்தி !

உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் வெற்றியை தீர்மானித்த பவுண்டரி முறையை ICC நீக்கியுள்ளது.

கிரிக்கெட்டில் பின்பற்றப்பட்டு வந்த பவுண்டரி முறை நீக்கப்பட்டதற்கு, இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

2019 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், சர்ச்சையை ஏற்படுத்திய பவுண்டரி முறையை நீக்குவதாக ஐசிசி நேற்று அறிவித்தது. ஐசிசி தொடர்களில் போட்டி சமனில் முடிந்தால், வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை மட்டுமே பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதாவது, போட்டி சமனில் முடிந்த பிறகு, சூப்பர் ஓவர் முறையிலும், ஒரே ரன்கள் எடுக்கப்பட்டால், வெற்றியாளரை தீர்மானிக்கும் வரை மீண்டும் மீண்டும் சூப்பர் ஓவர் முறையே பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஐசிசியின் இந்த முடிவுக்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், பவுண்டரி முறை நீக்கம் என்பது முக்கியமான முடிவு என்றும், இது போட்டி சமனில் முடியும் வேளைகளில் வெற்றியாளரை நியாமான முறையில் தேர்ந்தெடுக்க வழிவகுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

பௌண்டரி முறையால் நியாமான வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றால் உலகக்கோப்பையில் நாங்கள் வெற்றி பெற்றது நியாயம் இல்லையா? என்ன சொல்ல வருகிறார்..,, சச்சின் என இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பெலிங்டன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com

Share