Connect with us

#24 Exclusive

சபரிமலை தீர்ப்பு புதிய திருப்பம் ! பக்தர்களுக்கு ஆதரவாகவே தீர்ப்பு வரும்!

நாடு முழுவதும் அயோத்தி தீர்ப்பு எதுபோன்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதோ அதற்கு சற்றும் குறைவில்லாத நிலையில் சபரிமலை தீர்ப்பு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று கடந்த ஆண்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது, அதனை தொடர்ந்து கேரளா மாநிலம் முழுவதும் போர்க்களமாக மாறியது, சபரிமலை ஐய்யப்பன் கோவில் சந்நிதானத்திற்குள் பிற மதத்தை சேர்ந்த பெண்களும் செல்வோம் என்று அரசாங்க பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு பின்பு பக்தர்களின் கடும் எதிர்ப்பினால் திருப்பி அனுப்பப்பட்டனர்.

ஆனால் மாநில கம்யூனிஸ்ட் அரசோ எப்படியாவது பெண்களை சபரிமலை சந்நிதானத்திற்குள் அழைத்து செல்வோம் என்று பிடிவாதமாக இருந்தது, மேலும் அதிகாலையில் மாற்று உடையில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த இரண்டு பெண்களை அழைத்து சென்று சந்நிதானத்திற்குள் சாமி தரிசனம் செய்யவைத்தது.

Loading...

அதனை தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோவில் மேல்சாந்தி கோவில் நடையை சாத்தச்சொல்லி அதிரடியாக உத்தரவிட்டார், மேலும் எங்கள் நம்பிக்கையில் யாரும் விளையாட முடியாது என இந்து அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தனர், அதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் சபரிமலை தீர்ப்பு குறித்து மறுசீராய்வு செய்யவேண்டும் என்று மனுதாக்கல் செய்யப்பட்டது, இந்நிலையில் கம்யூனிஸ்ட் பிந்து மீண்டும் சபரிமலைக்கு செல்ல முயன்றார். இதனை கேரளா போலீசார் தடுத்தி நிறுத்தினர், இதனை தொடர்ந்து பிந்து வழக்கு தொடர்ந்தார் இவ்வழக்கை ஏற்ற நீதிபதி பாப்தே கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பு இறுதியானது அல்ல எனவும் இந்த வழக்கானது 6 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்விற்கு மாற்றப்பட்டுள்ளது எனக்கூறினார். அடுத்த வாரம் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் என கூறியுள்ளார்.

Loading...

சென்ற ஆண்டு வழங்கிய தீர்ப்பு இறுதியானது அல்ல என தெரிவித்த நீதிபதியின் கருத்து புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது இந்நிலையில் அடுத்த வரம் வரும் பித்து வழக்கின் தீர்ப்பு அவருக்கு எதிராக தான் தீர்ப்பு வரும் என்பதையும் மறைமுகமாக சொல்லியுள்ளதாக வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். அது மட்டுமில்லாமல் இந்த முறை தீர்ப்பானது சபரிமலை பக்தர்களுக்கு ஆதரவாகத்தான் வரும் என கூறி வருகின்றனர்.

Loading...

Trending