பூசணிக்காய் உடைச்சாச்சு… விரைவில் டீசர்& ஆடியோ – எஸ் ஜே சூர்யாவின் பொம்மை அப்டேட்!

பூசணிக்காய் உடைச்சாச்சு… விரைவில் டீசர்& ஆடியோ – எஸ் ஜே சூர்யாவின் பொம்மை அப்டேட்!

Loading...

இயக்குனர் எஸ் ஜே சூர்யா மற்றும் பிரியா பவானி சங்கர் நடிக்கும் பொம்மை படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக எஸ் ஜெ சூர்யா தெரிவித்துள்ளார்.

இயக்குனர் எஸ் ஜே சூர்யா இசை படத்தின் தோல்விக்குப் பிறகு முழு நேர நடிகராக மாறிவிட்டார். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான மான்ஸ்டர் படம் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவர்ந்தது. இந்நிலையில் அவர் இப்போது ராதா மோகன் இயக்கத்தில் பொம்மை என்ற படத்தில் நடித்து வருகிறார்.

Loading...

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மான்ஸ்டர் படத்தில் நடித்த பிரியா பவானி சங்கரே நடிக்கிறார். சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையான இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமக்கிறார். இந்த படத்தின் முக்கியமான அப்டேட் ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் எஸ் ஜே சூர்யா.

தன் டிவிட்டில் ‘பொம்மை” படப்பிடிப்பு பூசணிக்காய் உடச்சாச்சு ….. டீஸர் & ஆடியோ விரைவில். இயக்குனர் ராதாமோகனுடனான திருப்தியான பயணம். இளைய மேஸ்ட்ரோவிடம் அருமையான பாடல்கள். உங்கள் அனைவரையும் ஆச்சர்யப்படுத்த வருகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.

எஸ் ஜே சூர்யா நடிப்பில் ஏற்கனவே நெஞ்சம் மறப்பதில்லை மற்றும் இரவாக்காலம் ஆகிய படங்கள் முடிந்து பல ஆண்டுகளாக ரிலீஸாகாமல் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*