Connect with us

#24 Exclusive

அமெரிக்காவையே பதற வைக்கும் ரஷ்ய ஆயுதம் !!

ரஷ்யாவின் பாதுகாப்பு மந்திரி ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு அறிக்கை அளித்தார், பல ஆண்டுகால சோதனைகளைத் தொடர்ந்து கண்டங்களுக்கு இடையிலான புதிய ஹைபர்சோனிக் ஆயுதம் வெள்ளிக்கிழமை செயல்பாட்டுக்கு வந்தது.
அதாவது அவன்கார்ட் ஹைப்பர்சோனிக் கிளைடு வாகனம் பொருத்தப்பட்ட முதல் ஏவுகணை பிரிவு படையில் இணைக்கப்பட்டதாக பாதுகாப்பு மந்திரி செர்கெய் ஷோய்கு ரஷ்ய அதிபர் புடினுக்கு தெரிவித்தார் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புடின் மார்ச் 2018 இல் தனது வருடாந்திர உரையின் போது அதிநவீன அதிபயங்கர ஆயுதங்களை பற்றிய தகவல்களோடு அவன்கார்ட் பற்றிய தகவலையும் வெளியிட்டார், ஒரு இலக்கை நோக்கி செல்லும் வழியில் மிக லாவகமாக செல்லும் தனது திறன் மூலம் தற்போது உலகில் உள்ள ஏவுகணை தடுப்பு அமைப்புகளை பயனற்றதாக மாற்றும் என்பதையும் குறிப்பிட்டார் மேலும் ரஷ்ய அதிபர் புடின் அவாங்கார்டின் உருவாக்கத்தை 1957ல் சோவியத் ஒன்றியம் தனது முதல் செயற்கைக்கோளை ஏவியதுடன் ஒப்பிட்டால் அவன்கார்ட் மிகப்பெரிய தொழில்நுட்ப முன்னேற்றம் என்று விவரித்தார். இந்த வார தொடக்கத்தில், ஹைபர்சோனிக் ஆயுதங்களைக் கொண்ட ஒரே நாடு ரஷ்யா தான் என்பதை புடின் கூறினார் மேலும் கடந்த காலங்களை போலல்லாமல் வரலாற்றில் இப்போது தான் முதல்முறையாக ரஷ்யா முற்றிலும் புதிய வகை ஆயுதங்களை உருவாக்குவதில் உலகை வழிநடத்துகிறது என்பதையும் தெரிவித்தார்.

ஏற்கனவே ரஷ்யா மற்றும் சீனா உருவாக்கிய ஹைபர்சோனிக் ஆயுதங்களை எதிர்கொள்ள புதிய பாதுகாப்பு உத்திகளை அமெரிக்கா உருவாக்கி வரும் நிலையில் தற்போது இன்னும் வேகமாக செயல்பட முயற்சி செய்து வருகிறது.

எதிரி ஏவுகணைகளை, குறிப்பாக ஹைப்பர்சோனிக் ஆயுதங்களை விரைவாகக் கண்டறிய விண்வெளியில் பல அடுக்கு சென்சார்கள் வைப்பது குறித்து அமெரிக்க அரசு யோசித்து வருகிறது மேலும் விண்வெளியில் இடைமறிக்கும் ஆயுதங்களை நிலைநிறுத்தி வைக்கும் யோசனையையும் ஆய்வு செய்ய நிர்வாகம் திட்டமிட்டுள்ளது, எனவே பூஸ்டர் என்ஜின்கள் எரியும் போதே எதிரி ஏவுகணை பறக்க தொடங்கிய முதல் சில நிமிடங்களில் தாக்க முடியும் மேலும், பென்டகன் சமீபத்திய ஆண்டுகளில் ஹைப்பர்சோனிக் ஆயுதங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது, ஆகஸ்ட் மாதத்தில் பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர்,இன்னும் சில வருடங்களில் அமெரிக்காவும் ஹைப்பர்சானிக் ஆயுதங்களை கொண்டிருக்கும் என்றும் இதற்கு அமெரிக்க ராணுவம் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாகவும் கூறினார். 

அவாங்கார்ட் ஒலியின் வேகத்தை விட 27 மடங்கு வேகமாக பறக்கும் திறன் கொண்டது என்று ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது மேலும் ரஷ்ய ஊடகங்களின் தகவல்கள்படி அவன்கார்ட் முதலில் சோவியத் கால ஆர்எஸ் -18 பி கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகளில் ஏற்றப்படும், இது நேட்டோவால் எஸ்எஸ் -19 என்ற குறியீடு பெயரிடப்பட்டுள்ளது. அவன்கார்ட் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தபின் வருங்கால சர்மாட் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகளில் பொருத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Loading...

Loading...
Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending