முரசொலி மூலபத்திரம் கண்டுபிடிக்கப்பட்டது ! தியாகராஜ சுந்தரம் பெயரில் இருக்கிறது அடுத்த பரபரப்பு !!

டெல்லி :- முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைத்துள்ளது என பாமக நிறுவனர் ராமதாஸ் ட்விட்டரில் திமுக தலைவர் ஸ்டாலினின் அசுரன் திரைப்பட விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்தார், அதன்பிறகு பாஜக மாநில செயலாளர் பேராசிரியர் ஸ்ரீனிவாசன் டெல்லி சென்று தேசிய பட்டியலின ஆணையத்தில் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாகவும் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று அதிரடியாக புகார் ஒன்றிணை அளித்தார்.

Loading...

அதனை தொடர்ந்து பட்டியலின ஆணையம் துணை தலைவர் முருகன் தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்து சென்னையில் கடந்த ஆண்டு நவம்பர் 19-ம் தேதி முதல் விசாரணையை தொடங்கியது, இதில் பஞ்சமி நிலம் குறித்து விசாரிக்க ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என்று திமுக ஆணையத்திடம் தெரிவித்து இருந்தது, மேலும், ராமதாஸ் மற்றும் ஸ்ரீனிவாசன் ஆகியோர் மீது மான நஷ்ட வழக்கு தொடங்க போவதாகவும் திமுக சார்பில் எச்சரிக்கை விடப்பட்டது.

இந்த சூழலில் முரசொலி மூலபத்திர வழக்கின் இடையில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் தடா பெரியசாமியும் வழக்கில் இணைந்தார், அவரிடம் முரசொலி பஞ்சமி நிலம் என்பதற்கான சில தரவுகள் இருப்பதாக கூறி வழக்கில் இணைந்தார், இந்த சூழலில்தான் தற்போது முரசொலி மூல பத்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தடா பெரியசாமி கூறியுள்ளார்.

Loading...

நாங்கள் மூலபத்திரத்தை கண்டு பிடித்து விட்டதாகவும், 1974 ஆம் ஆண்டு, அஞ்சுகம் பதிப்பகம் என்ற பெயரில் ஒரு பத்திரம் செய்திருக்கிறார்கள் என்றும் அதுவும் முரசொலி மாறனின் உண்மையான பெயரான தியாகராஜ சுந்தரம் என்ற பெயரில் வாங்கப்பட்டிருக்கிறது. மாதவன் நாயர் என்பவரிடம் இருந்து, முரசொலி மாறன் வாங்கியிருக்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார்

இதனை ஸ்டாலின் பொதுவெளியில் வைக்காததற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம் என்று கூறிய அவர் மூலம் பத்திரம் முரசொலி மாறனின் இயற்பெயரான( தியாகராஜ சுந்தரம்) என்று இருப்பதால் சொத்திற்கு அவரது வாரிசுகள் உரிமை கொண்டாட நாமே வழி ஏற்படுத்தி கொடுத்துவிடுவோமோ என்று யோசித்திருக்கலாம், அல்லது அதை விட மற்றொரு முக்கிய பிரச்சனை மூலபத்திரத்தில் இருப்பதால் அவர் காலதாழ்த்த நினைக்கலாம் என்று கூறியுள்ளார்.

இனி அடுத்து வாரிசுகள் சண்டை ஏற்படுமோ?

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*