#BREAKING திமுக ஆர். எஸ் பாரதி கைது, தயாநிதி மாறன் ஓட்டம் !!? மத்திய குற்ற பிரிவு போலீசார் அதிரடி !!!

தாழ்த்தப்பட்ட மக்களை தரக்குறைவாக ஒப்பிட்டு பேசிய வழக்கில் திமுக அமைப்பு செயலாளர் ஆர் பாரதியை கைது செய்தது காவல்துறை.

Loading...

சென்னையில் பிப்ரவரியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய ஆர்.எஸ். பாரதி, பிராமணர்களை மிக கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும், தமிழ்நாட்டில் கருணாநிதி ஆட்சிக்கு வந்த பிறகு வரதராஜனை உட்கார வைத்தார். அதற்குப் பிறகு ஏழெட்டு ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் ஜட்ஜாக இருந்தார்கள் என்றால், அது திராவிட இயக்கம் போட்ட பிச்சை என கூறியிருந்தார்.

ஆர்.எஸ். பாரதியின் இந்த கருத்துகள் கடும் விமர்சனங்களுக்குள்ளாகின. இதனையடுத்து பல்வேறு வழக்குகள் அவர் மீது பதியப்பட்டன, இந்த சூழலில் தான் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காவல்துறையினர் அதிகாலை அவரை கைது செய்து வாகனத்தில் ஏற்றினர்.

Loading...

மேலும் தாழ்த்தப்பட்ட மக்களை தரக்குறைவாக ஒப்பிட்டு பேசிய திமுக எம் பி தயாநிதி மாறன் மீது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என காவல்துறை ஆணையர் மற்றும் தலைமை செயலாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது, இந்த சூழலில் தான் தயாநிதி மாறன் முன் ஜாமீன் பெறுவதற்காக தற்போது அவசர அவரசமாக நீதிமன்றம் ஓடி இருப்பதாக கூறப்படுகிறது.

ஆர் எஸ் பாரதி கைது செய்யப்பட்டிருப்பது தாமதனமான நடவடிக்கை என்றாலும் அதனை வரவேற்பதாக பட்டியல் இன மக்கள் தெரிவித்துள்ளனர் மேலும் தயாநிதி மாறானயும் உடனே கைது செய்யவேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

.ஆலந்தூரில் உள்ள ஆர்.எஸ்.பாரதி வீட்டில் இருந்து போலீசார் கைது செய்ததால் ஆதித் தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண சுந்தரம் என்பவர் ஆர்.எஸ்.பாரதி மீது புகார் அளித்திருந்தார்.மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் தலைமையிலான போலீசார், ஆர்.எஸ்.பாரதியை கைது செய்தனர்.

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*