நீக்கப்படுவார் என்று தெரியும் ஆனால் இப்படி அவமானப்படுவார் என்று தெரியாதே? பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சமூகவலைத்தளம் :- தமிழக பாஜகவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை புகழ்ந்து பேசிய BT அரசகுமாரையும் அவரால் புகழப்பட்ட ஸ்டாலினையும் வெளுத்து வாங்கி இருக்கின்றனர்.

Loading...

நேற்று புதுக்கோட்டையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் அரசு இல்ல திருமணவிழாவில் கலந்துகொண்ட பாஜக மாநில துணை தலைவராக தற்போதுவரை பொறுப்பு வகிக்கும் B.T அரசகுமார் திமுக தலைவர் ஸ்டாலினை அடுத்த முதல்வர் என்றும், தமிழகத்தில் அடுத்த ஆட்சி திமுக ஆட்சி என்றும் குறிப்பிட்டார், மேலும் எம் ஜி யாருக்கு பிறகு நான் ரசித்த ஒரே தலைவன் தளபதி என திமுகவினர் கூறும் வார்த்தைகளை சொல்லி குறிப்பிட்டார்.

அத்துடன் திமுக கரைவேட்டியை கட்டிக்கொள்ள எனக்கு ஒன்றும் தயக்கம் இல்லை என்றும் அரசகுமார் குறிப்பிட்டிருந்தார், இந்நிலையில்தான் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களை ஒருமையில் விமர்சித்த திமுக தலைவர் ஸ்டாலினை பாஜகவில் மாநில பொறுப்பில் உள்ள ஒரு தலைவர் புகழ்ந்து பேசியது பாஜக தொண்டர்கள் இடையே அதிர்ச்சி அளித்தது.

Loading...

பலரும் தங்கள் ஆதங்கங்களை வெளிப்படுத்தி வருகின்றனர், பாஜக மாநில தலைவர்கள் பலரும் அரசகுமார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர், மேலும் அரசகுமாருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழக பாஜக தனது அதிகார பூர்வ ட்விட்டர் பக்கத்தில்..,

யாரையும் புகழ்ந்து பேசி அண்டி பிழைக்கும் நிலை உண்மையான @bjp4tamilnadu தொண்டனுக்கு இல்லை ஆண்டிகள் கூடி தேர் இழுத்தாலும் “கைப்புள்ளை” வேண்டுமானால் சர்வாதிகாரி ஆகலாம்,கனவில் கூட என்றும் அரசனாக முடியாது அன்றும் இன்றும் என்றும் @narendramodi தான் கடைக்கோடி தொண்டனுக்கும் இதயதெய்வம் மோடிதான் என குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் சொந்த கட்சியினரே அரசகுமாரை வலுவாக விமர்ச்சித்து வருகின்றனர், நாங்கள் யாருக்கும் எந்த குடும்பத்திற்கும் கொத்தடிமை இல்லை என்றும் எங்கள் கொள்கைக்கு நேர் எதிராக பேசும் யாரையும் விமர்சனம் செய்வோம் என்று பாஜக தொண்டர்கள் தங்கள் கருத்தினை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அரசகுமார் துணை தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார் என்று தெரியும் ஆனால் இப்படி சொந்த கட்சி ட்விட்டர் பக்கத்திலேயே அவமானப்படுவார் என்று தெரியாதே என பலரும் கூறிவருகின்றனர்.

இந்நிலையில் பாஜக மாநில பொதுச்செயலாளர் k.s நரேந்திரன் முக்கிய அறிவிப்பு ஒன்றிணை வெளியிட்டுள்ளார் அதில் இனி அரசகுமார் கட்சி சார்பில் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்க கூடாது என்றும் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தேசிய தலைமைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் நாளை கட்சியிலிருந்து அரசகுமார் நீக்கப்படுவார் என்று உறுதியாகிறது.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*