எந்த நிறுவனமும் கொடுக்காத அதிரடி சலுகை வெளியிட்டது ஜியோ ! இனி கொண்டாட்டம்தான்

எந்த நிறுவனமும் கொடுக்காத அதிரடி சலுகை வெளியிட்டது ஜியோ ! இனி கொண்டாட்டம்தான்

தொலைதொடர்பு துறையில் ஜியோ நிறுவனம் அறிமுகம் ஆனதில் இருந்தே வாடிக்கையாளர்களுக்கு சலுகை மழை பொழிந்து வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் வரும் புத்தாண்டை ஒட்டி ஜியோ நிறுவனம் புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது

இதன்படி 2020 ஆம் ஆண்டை கொண்டாடும் வகையில் 2020 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு வருடத்திற்கு தினமும் அன்லிமிட்டட் அழைப்புகள் மற்றும் தினமும் 1.5ஜிபி டேட்டா வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை ஸ்மார்ட்போன் மற்றும் ஜியோ போன் ஆகிய இரண்டு வகை வாடிக்கையாளர்களுக்கு பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சலுகை டிசம்பர் 24ம் தேதி முதல் அதாவது நாளை முதல் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது

அதேபோல் இன்னொரு சலுகையாக 2020 ரூபாய்க்கு ஜியோ போன் வாங்கினால் அதில் ஒரு வருடத்திற்கு அன்லிமிட்டட் வாய்ஸ் அழைப்புகள் மற்றும் தினசரி 0.5ஜிபி டேட்டாவும் மற்றும் அளவில்லா எஸ்எம்எஸ் வழங்கப்படும் என்று ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது

Loading...

2020 ஆம் ஆண்டில் 2020 ரூபாய் கொடுத்தால் ஒரு வருடத்திற்கு அன்லிமிட்டட் வாய்ஸ் கால் மற்றும் அதிகப்படியான டேட்டாக்கள் கிடைப்பதால் இந்த சலுகையை பெற அதிக அளவிலான வாடிக்கையாளர்கள் முன்வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Loading...
Loading...

TNNEWS24 TEAM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *