வாய் பேச முடியாத பெண்ணை நரபலி கொடுக்க முயன்ற உறவினர்கள்- எதற்காக தெரியுமா?

வாய் பேச முடியாத பெண்ணை நரபலி கொடுக்க முயன்ற உறவினர்கள்- எதற்காக தெரியுமா?

Loading...

ஆந்திராவில் புதையல் கிடைக்கும் என்ற ஆசையில் உறவுக்கார பெண்ணையே நரபலி கொடுக்க முயற்சி செய்துள்ளது ஒரு கும்பல்.

ஆந்திரா மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டதைச் சேர்ந்தவர் சரஜம்மா. இவர் வாய் பேச முடியாதவர். இவருக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் அவரது உறவினர்களான சுப்பமா, சேஷாத்ரி தம்பதியினர் புதையல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சரஜம்மாவை அதற்காக பலி கொடுக்க திட்டம் தீட்டியுள்ளனர். இதையடுத்து பூஜைக்கான ஏற்பாடுகளை செய்த அவர்கள், ஊரின் வெளியே உள்ள ஏரியின் அருகே அழைத்துச் சென்று இந்த கொடூர செயலை செய்து முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

Loading...

ஆனால் அவர்களின் சதியை உணர்ந்துகொண்ட சரஜம்மா தன்னைக் காப்பாற்றிக் கொள்ள சத்தம் போட்டு அலறியுள்ளார். அந்த அலறல் சத்தத்தைக் கேட்ட அக்கம்பக்கம் கிராமத்தில் இருந்த மக்கள் ஓடிவந்து பார்த்து அவரைக் காப்பாற்றியுள்ளனர். மக்கள் ஒன்றுகூடியதை அடுத்து சரஜம்மாவின் உறவினர்கள் அங்கிருந்து ஓடி தலைமறைவாகியுளனர். இதன் பின்னர் சராஜம்மாவின் மகன் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்த எஸ்.ஆர். புரம் போலீசார் தலைமறைவாகி உள்ள அவரது உறவினர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த 2020 ஆம் ஆண்டிலும் இதுபோன்ற மூட நம்பிக்கைகளை மக்கள் நம்புவது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*