Connect with us

#24 Exclusive

படத்தில் வசனம் பேசினால் பத்தாது ! அமெரிக்க போலீஸிடம் என்ன சொல்லி தப்பித்தீர்கள் நியாபகம் உள்ளதா ? விஜய் மற்றும் கமலை கிழித்த ராதா ரவி .

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ராதாரவி திமுக , திக , விஜய் , கமல் என அனைவரையும் சரமாரியாக விளாசினார் அதில் சில மாதங்களுக்கு முன் திமுக MP கனிமொழி திருப்பதி கோவிலில் இருப்பது உண்மையான கடவுள் என்றால் எதற்கு அங்கு காவல் துறை பாதுகாப்பு என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார் அது பற்றி பேசிய ராதாரவிக்கு கைதட்டுகள் குவிந்த நிலையில் .

திமுக குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வாங்கிய கையெழுத்து பற்றி பேசினார் அப்போது குடியுரிமை சட்டத்தால் இந்தியர்கள் யாருக்கும் பாதிப்பில்லை என்ற சூழலில் திமுக ஏன் இதை செய்கிறது . இதேபோல பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள் யாரையும் துன்புறுத்த மாட்டோம் , இந்து கோவில்களை இடிக்க மாட்டோம் என்று பாகிஸ்தான் மக்களிடம் கையெழுத்து வாங்கமுடியுமா என்று கேள்வியெழுப்பினார் .

அப்போது நடிகர் விஜய் பற்றி பேசிய அவர் படங்களில் கருத்து சொன்னால் பத்தாது நிஜ வாழ்க்கையிலும் நேர்மையாக வரிக்கட்ட வேண்டும் என்று விஜயை மறைமுகமாக சாடி பேசினார் . பின்னர் கமல் குறித்து வெளிப்படையாக பேசிய ராதா ரவி சில ஆண்டுகளுக்கு முன் கமல் ஹாசன் அமெரிக்கா சென்றபோது அவரின் பெயர் இஸ்லாமிய பெயர் போல இருப்பதால் அவரை 7 மணி நேரம் அமரவைத்து விசாரித்துள்ள்ளனர்

Loading...

அப்போது நான் ஒரு இந்து என்று கூறி அதை நிரூபித்தது அவரை விடுத்துள்ளனர் அப்படி தப்பிவந்த கமல் இந்தியா வந்து இந்து தீவிரவாதி என்று பேசுவதா என்று அவரை கடுமையாக விமர்சித்தார். ராதா ரவியின் இந்த பேச்சு இப்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது

Loading...
Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending