பாலியல் குற்றவாளியை நீதிமன்றத்திற்குள்ளே சென்று கொலை செய்த பெண்கள் அதிரடி !! வரலாறு மீண்டும் திரும்புமா?

தற்போது ஐதராபாத் நகரில் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட ப்ரியங்கா ரெட்டி, தமிழகத் தை சேர்ந்த ரோஜா ஆகியோரது மரணங்கள் பலருக்கும் அதிர்ச்சியை அளித்த நிலையில் இந்தியாவில் பாலியல் குற்றவாளியை பெண்களே நேரடியாக நீதிமன்றம் உள்ளேயே சென்று கொலை செய்த சம்பவம் உங்களுக்கு தெரியுமா? ஆம் அப்படி ஒரு சம்பவம் இந்தியாவில் நடந்துள்ளது.

Loading...

2004-ம் ஆண்டு ஆகஸ்ட் 13-ம் தேதி மதியம் 3 மணியளவில் நாக்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் அக்கு யாதவ் என்ற கொடூரமான பாலியல் வன்புணர்வு குற்றவாளியை கஸ்தூர்பா சேரியை சேர்ந்த பெண்கள் அடங்கிய மக்கள் கூட்டம் நீதிமன்றத்தில் வைத்தே தாக்கி கொன்ற சம்பவம் இந்திய வரலாற்றில் இன்றும் நிலைத்து நிற்கிறது.

அக்கு யாதவ் என்பவன் தொடர்ந்து கஸ்துர்பா பகுதியில் வசிக்கும் பெண்களை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்வது, அதனை வைத்து மிரட்டி தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்வது உள்ளிட்ட செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்துள்ளான் இதனால் அவன் மீது ஏகப்பட்ட புகார்கள் காவல்நிலையத்தில் இருந்தது அதனையும் மீறி ஜாமீனில் வெளிவந்து குற்றங்களில் ஈடுபட்டான்.

Loading...
கொலை செய்யபட்டவன் வலது

கடைசியாக 22 வயது பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ததற்காக நீதிமன்றத்தில் ஜாமீன் பெறவந்தவனை, 200 பெண்கள் மொத்தமாக கூடி மிளகாய் பொடி, வீட்டில் சமையல் கத்தி உள்ளிட்டவற்றை கொண்டு அடித்தே அவனை துடிக்க துடிக்க கொலை செய்தனர். அவன் உடலில் 70 கத்தி குத்துகள் இருந்ததுடன் கடைசியாக பாதிக்கப்பட்ட பெண் அவனது ஆண் உறுப்பை கத்தியால் சிதைத்தார் என்று 2005- ம் ஆண்டு வெளியான தி கார்பியன் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

இந்த சம்பவம் இந்தியா முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது, 21 பெண்கள் மீது வழக்கு பதிவு செய்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வழக்கில் போதிய ஆதாரம் இல்லாத காரணத்தால் அனைவரும் விடுவிக்கப்பட்டனர், பாலியல் குற்றவாளி கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து இதுவரை அந்த பகுதியில் ஒரு பலாத்கார சம்பவம் கூட நடைபெறவில்லை.

தற்போது பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்குவதற்கு பதில் பொதுமக்கள் முன்னிலையில் குற்றம் புரிந்த நபர்களை அடித்து கொல்லப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது.

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*