Connect with us

#24 Exclusive

நான் அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டில் பங்கேற்கமாட்டேன் ! 16 காளைகளை அடக்கிய ரஞ்சித் அதிர்ச்சி பேட்டி !

உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேற்று மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெற்றது அதில் 16 காளைகளை அடக்கி முதல் பரிசை பெற்றார் ரஞ்சித் என்ற இளைஞர். அவருக்கு 6 லட்சம் மதிப்புள்ள கார் பரிசாக வழங்கப்பட்டது .

தை 1 ஆம் தேதி பாலமேட்டிலும் , தை 2 ஆம் தேதி அவனியாபுரத்திலும் தை 3 ஆம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு விமர்சையாக நடைபெற்று முடிந்தது , அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 14 காளைகளை பிடித்த பிரபாகரன் என்ற இளைஞருக்கு ஒரு கார் பரிசாக வழங்கப்பட்டது , அலங்காநல்லூரில் முதல் பரிசு பெற்ற ரஞ்சித்துக்கு கார் மட்டுமின்றி 10 தங்கக்காசுகள் , வெள்ளிக்காசு டிவி உள்ளிட்ட பல பரிசுகளையும் பெற்றார் ரஞ்சித் .

முதல் பரிசு பெற்ற ரஞ்சித் ஒரு மணி நேரத்தில் 16 காளைகளை அடக்கியுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு அதன் பிறகு ஊடகங்களுக்கு பேட்டியளித்த ரஞ்சித் தான் அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டில் பங்கேற்கமாட்டேன் என்று கூறினார் அதற்கான விளக்கத்தை அவர் கூறவில்லை ஆனாலும் வேறு வீரர்களுக்கு வழிவிட்டு அவர் இதை கூறியிருக்கலாம் என்று கருதப்படுகிறது மேலும் தனக்கு பரிசாக வந்த காரை தான் விற்கமாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார் .

Loading...

©TNNEWS24

Loading...
Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending