மோடி தான் கெத்து மாணவர்கள் முன்னிலையில் வெளுத்துக்கட்டிய பாண்டே ! கடும் கோபத்தில் அந்த கட்சி?

மோடி தான் கெத்து மாணவர்கள் முன்னிலையில் வெளுத்துக்கட்டிய பாண்டே ! கடும் கோபத்தில் அந்த கட்சி?

Loading...

சமூகவலைத்தளம்.,

பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே தனது காதல் திருமணம் குறித்தும் மோடியின் நிர்வாகம் குறித்தும் மாணவர்கள் இடையே பேசிய பேச்சுக்கள் தற்போது இணையத்தில் பல தரப்பினர் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மாணவர்கள் இடையே பேசிய வீடியோவில்.

Loading...

மோடியின் நிர்வாக திறனை பாண்டே வெகுவாக புகழ்ந்துள்ளார். தமிழகத்தை பொறுத்தவரை பல்வேறு தலைவர்கள், அமைப்பை சேர்ந்தவர்கள் மாணவர்கள் இடையே இந்திய தேசம் குறித்தும் பிரதமர் மோடி குறித்தும் எதிர் வினைகளை விதைத்து வரும் சூழலில் தைரியமாக பாண்டே பேசியது பலரது பாராட்டுகளை பெற்றுள்ளது.

சொந்தமாக தொழில் செய்வது சிறந்ததா இல்லை வேலை பார்ப்பது சிறந்ததா என்பது குறித்தும் மாணவர்கள் இடையே பாண்டே உரையாற்றினார், அதில் மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பாண்டே பதில் அளித்தார், அப்போது தனது திருமணம் ஒரு காதல் திருமணம் என்றும் தான் காதலித்த பெண்ணையே மனைவியாக கரம் பிடித்ததாகவும் கூறினார், மேலும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை மிக முக்கியம் என்றும் எவ்வாறு தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்று மோடியை பார்த்து கற்றுக்கொள்ளவேண்டும் என்று கூறினார்.

பாட்டிலில் அரை பாட்டில் தண்ணீர் இருப்பதை பாதி தண்ணீர் இருப்பதாகவும் மீதி காற்று இருப்பதாகவும் கூறுபவர் மோடி எதனையும் மாற்றி யோசிக்கும் சிந்தனை கொண்டவர். தற்போது உலக நாடுகளுக்கு இந்தியாவில் மதிப்பு உயர்ந்ததற்கு மோடி முக்கிய காரணம் என்று அழுத்தம் திருத்தமாக கூறினார்.

மேலும் தற்போது இந்திய பாஸ்போர்டிற்கு உலக நாடுகள் இடையே தனி மதிப்பே உண்டு என்றும், வெளிநாடு சென்று பாருங்கள் தெரியும் என்று மாணவர்கள் மத்தியில் மோடியின் ஆட்சியின் சிறப்பை விளக்கினார். ஒரு பத்திரிகையாளர் ஒருவர் வெளிப்படையாக மாணவர்கள் மத்தியில் தமிழகத்தில் மோடி குறித்து பேசியது பாஜகவினர் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பலரும் இந்தியா மற்றும் மோடிக்கு எதிராக தமிழகத்தில் மாணவர்கள் இடையே பிரிவினை கருத்தை விதைத்துவரும் சூழலில் பாண்டேவின் அசத்தல் பேச்சு மாணவர்களை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்லும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதனால் தான் அந்த திராவிட கட்சி பாண்டே மீது கடும் கோபத்தில் இருக்கிறதோ ?

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உங்களது வாட்ஸாப் எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப் செய்யவும்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3888 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*