Connect with us

#24 Exclusive

நான் தமிழன் இல்லையா வீரமணிக்கு பொளேர் பதிலடி கொடுத்த பாண்டே ! சிறப்பான சம்பவம். ட்ரைலர் இருப்பதாகவும் எச்சரிக்கை

சாணக்யா இணையஊடகத்தின் நிறுவனரும் பிரபல பத்திரிகையாளருமான ரங்கராஜ் பாண்டே தன்னை தமிழன் இல்லை என்று விமர்சனம் செய்தவர்களுக்கு தகுந்த பதிலடியை கொடுத்துள்ளார், குறிப்பாக பெரியாரிஸ்ட்கள் தொடர்ந்து பாண்டேய்வின் சாதியை குறித்து பேசி அவர் தமிழர் இல்லை என்றும் வெளி மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் விமர்ச்சித்து வந்தனர்.

மேலும் பெரியாருக்கு யூனஸ்க்கோ அந்தஸ்து கொடுக்கவில்லை என்ற செய்தியை நமது TNNEWS24 இணையதளம் வெளியிட்டபோது அதனை மேற்கோள்காட்டி ரங்கராஜ் பாண்டேவை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் திராவிட கழக தலைவர் வீரமணி, மேலும் தமிழர் இல்லாத பார்ப்பனர் இதுபோன்று ஈடுபடுவதாக மறைமுகமாக குற்றம் சுமத்தினார்

மேலும் தோசை மதிமாறன், சுந்தரவல்லி, அருள்மொழி, பிற பெரியாரிஸ்ட்கள் தொடர்ந்து பண்டேய்விற்கு எதிராக பேசும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர் அதற்கு இன்று மக்கள் முன்பு தகுந்த பதிலடியை கொடுத்தார் பாண்டே.

Loading...

அச்சம் தவிர் எனும் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாண்டே பெண்களின் திறமை குறித்தும் மனவலிமை குறித்தும் பேசினார் பின்பு நான் தமிழன் இல்லைன்னு சிலர் சொல்றாங்க. நான் தமிழன் இல்லையென்றால் யாரும் தமிழனே இல்லை. எனக்குத் தமிழ்தான் தெரியும். ஹிந்தி ‘தோடா தோடா’தான்.

Loading...

இங்கலீஷ் கூட ‘yes or No’-ன்னு குறைந்த வார்த்தைகள்தான் தெரியும் . நான் படித்தது பச்சை தமிழ், சுவாசித்துக் கொண்டிருப்பதும் தமிழ்தான். இன்னொரு விஷயம் உங்களுக்கு தெரியுமா? தமிழ்நாட்டில் 40 % தமிழர் அல்லாதவர்கள்தான். இப்படி என்னிடம் சொல்லியவர் ஒரு தெலுங்கர்.
யார் யாரை எல்லாம் தமிழர் இல்லை என்று சொல்கிறோமா அவர்களைத்தான் முதல் அமைச்சர் ஆக்கிவிடுவார்கள் நம் மக்கள். (பயப்படாதீங்க, எனக்கு அப்படி ஒரு அபிப்ராயம் இல்லை) தமிழக மக்கள் தங்களோட இதயத்துக்கு நெருக்கமாக யாரை உணர்ந்தாலும் அவர்களை அப்படியே ஏத்துப்பாங்க/ சக நண்பர்களாக்கி கொள்வார்கள். அதனாலத்தான் இங்க வாழ வந்தவங்களுக்குத் தொடர்ந்து வாய்ப்பும் வளர்ச்சியும் சாத்தியமாகி இருக்கு. என்றார்.

குறிப்பாக தன்னை தமிழர் இல்லை என்று விமர்ச்சிக்கும் பெரியாரிஸ்ட்களின் தலைவர் ஈ வெ ராமசாமி அவர்களின் தாய்மொழி தெலுங்கு என்றும் மறைமுகமாக குறிப்பிட்டு ஒரே அடியாக அடித்துள்ளார் பாண்டே ! மேலும் கடைசியாக விரைவில் அடுத்து ஒரு குட்டி ட்ரைலர் வரும் அப்போதெரியும் என்று கூறி பெரியாரிஸ்ட்கள் வயிற்றில் புளியை கரைத்துள்ளார் பாண்டே !

என்ன அந்த ட்ரைலர் யாரை பற்றி இருக்கும் என்ற பல்வேறு கேள்விகள் இணையதளவாசிகளிடம் எழுந்துள்ளன.

©TNNEWS24

Loading...

Trending