மீண்டும் வருகிறார் உங்கள் பாண்டே !!

தமிழகத்தை சேர்ந்த பத்திரிகையாளர்களில் ஒரு சிலரின் பெயர்கள் மட்டுமே கிராமங்களை சென்று அடையும் அந்த வகையில் அதில் ரங்கராஜ் பாண்டேவும் ஒருவர், அவரது நேர்காணல்கள் அனைத்துமே மக்கள் கேட்க வேண்டிய கேள்விகளை பிரதிபலிக்கும் வெகு காலம் ஊடகத்துறையினர் கேட்க மறந்த கேள்விகளையும் நேரடியாக பாண்டே எழுப்பி இருக்கிறார்.

Loading...

இந்நிலையில் பாண்டே தந்தி தொலைக்காட்சியில் இருந்து 2018 ம் ஆண்டு டிசம்பர் மாதம் விலகினார், அதன் பிறகு சாணக்யா எனும் இணைய ஊடகத்தை தொடங்கி நடத்தி வருகிறார் பாண்டே, இந்நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் பாண்டே NEWS18 தொலைக்காட்சியின் தலைமை பொறுப்பில் இணைய இருப்பதாக செய்திகள் வெளியானது.

ஆனால் அதனை அப்போது பாண்டே மறுத்து இருந்தார், மேலும் இதுவரை News18 தரப்போ தானோ அதிகார பூர்வ பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனவும் அப்படி ஒரு தகவல் வந்தால் உடனடியாக உங்களிடம் தெரிவிப்பதாக கூறி முற்று புள்ளி வைத்தார், இந்த நிலையில் பாண்டேவிடம் NEWS18 தரப்பு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Loading...

பாண்டே தரப்பிலும் அதற்கு சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் ஆகஸ்ட் மாதம் பாண்டே தனது பணியை மீண்டும் தொடங்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது, இரண்டு தரப்பிலும் இதுவரை அதிகார பூர்வ தகவல் கூறாத நிலையில், news18 சேனலில் இருந்து குணசேகரன் மாதத்தின் கடைசி நாளில் விலகியது அங்கு வெற்றிடம் காலியாக இருப்பது போன்றவை இதனை உறுதி படுத்தும் விதத்தில் அமைந்துள்ளதாக பார்க்க படுகிறது.

விரைவில் பாண்டேவின் விவாதங்களை நேரலையில் வீட்டில் இருந்தே இனி பார்க்கலாம் எனும் செய்து அவரது வரவை எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.அதே நேரத்தில் பாண்டே களத்திற்கு வந்தால் TRP எகிறும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை !

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3945 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*