பாண்டே வெளியேறியதற்கு யார் காரணம்? இப்போது சொல்லுங்கள் ஊடகத்தை நசுக்குவது யார்? அதிரடி திருப்பம் !!

TNNEWS24 : தமிழகத்தில் பெரும்பாண்மை சாமானிய மக்களுக்கும் பத்திரிகையாளன் என்றால் முதலில் நினைவிற்கு வரும் முகம் பாண்டே, தனது கேள்விகளால் எதிர் தரப்பை திணற செய்ததில் என்றும் அவருக்கே முதலிடம் காலம் காலமாக தமிழக ஊடகங்கள் திராவிட கழகத்தின் தலைவராக இருக்க கூடிய வீரமணி மற்றும் திமுக தலைவர்களிடம்..,

Loading...

நீங்கள் ஏன் இந்து மதத்தை எதிர்ப்பது போல் வேறு எந்த மதத்தையும் எதிர்ப்பதில்லை அப்படி என்றால் நீங்கள் இந்துக்களின் விரோதி தானே என்று ஒரு காலமும் கேள்வி எழுப்பியது இல்லை மாறாக ரங்கராஜ் பாண்டே கேள்வி எழுப்பினார், சுப வீரபாண்டியனை தோலுரித்தார் முன்னணியில் இருந்த ஊடகவியலாளர் திடீர் என இளைஞர்களுக்கு வழிவிடுவதாக கூறி தான் வகித்த பொறுப்பில் இருந்து வெளியேறினார்.

ஆனால் அன்றே பாண்டேவை வெளியேற்ற கோரி திமுக தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின, பலரும் குற்றசாட்டுகளை முன்வைத்தனர், இந்த நிலையில் பாண்டே வேந்தர் தொலைக்காட்சியின் பொறுப்பை எடுத்து நடத்தினார், அப்போது அங்கு திமுகவால் மோதல் உண்டாகி அதனை பாதியோடு நிறுத்திவிட்டு வெளியேறுவதற்கு காரணமாக அமைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Loading...

தொடர்ந்து பாண்டேவை ஓரம்கட்ட நடந்த முயற்சிகள் குறித்து இதுவரை எந்த ஊடகத்தை சேர்ந்தவர்களும் குரல் கொடுக்கவில்லை, எந்த ஊடக அமைப்புகளும் குரல் கொடுக்கவில்லை, இது ஏன் என்ற கேள்வி இப்போது போராடும் போராளிகளை பார்த்து பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்நிலையில் பாண்டே தந்தி டிவி யில் இருந்து வெளியேறிய போது அவருக்கு பெரிய தொகை கொடுத்து தங்கள் ஊடகத்தில் பணியாற்ற மாறன் சகோதரர்கள் முயன்றதாகவும் ஆனால் அது தனக்கு சரிவராது என பாண்டே மறுத்ததாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாருக்கு கீழும் இயங்கவேண்டாம் என பாண்டே தனியாக சாணக்யா நிறுவனத்தை தொடங்கி வழக்கம் போல் அவரது கருத்துக்களை வெளிப்படுத்தி வருவதுடன், புதிதாக ஊடக படிப்பு சொல்லி கொடுக்க பள்ளியிலே தொடங்கிவிட்டார் என்பது குறிப்பிட தக்கது.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3948 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*