வெளியேறினார் பாண்டே மீண்டும் குடைச்சலை கொடுத்த கட்சி எது? வெளியான தகவலால் பரபரப்பு !!

சமூகவலைத்தளம் :- தமிழகத்தில் முன்னணி ஊடகவியாளர்கள் மத்தியில் முதல் இடத்தில் இருப்பவர் ரங்கராஜ் பாண்டே, இவரின் துடிப்பான கேள்விகள் மூலம் அரசியல்வாதிகள், சித்தாந்ததலைவர்கள் உள்ளிட்ட பலரை பொதுமக்கள் மத்தியில் அடையாளம் காட்டியிருக்கிறார்.

Loading...

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தலைமை செய்தியாசிரியராக பணியாற்றிய பாண்டே அந்த நிறுவனத்தை தமிழகத்தின் முன்னணி ஊடகமாக ஊழியர்கள் உதவியுடன் தரம் உயர்த்தினார், இந்நிலையில் கடந்த ஆண்டு இளைஞர்களுக்கு வழிவிடுவதாக கூறி தனது பொறுப்பில் இருந்து பாண்டே விலகினார். அதனை தொடர்ந்து சாணக்யா இணைய ஊடகம் ஒன்றிணை தொடங்கி தனது ஊடக பணியை செயல்படுத்தி வருகிறார்.

அத்துடன் வேந்தர் தொலைக்காட்சியின் முழு பொறுப்பினையும் பாண்டே எடுத்து நடத்தி வந்தார், இந்நிலையில் கடந்த சில வாரங்களாக வேந்தர் தொலைக்காட்சி மூலம் பாண்டே கருத்து மக்களை சென்றடைவதை சிலர் விரும்பாததாக கூறப்படுகிறது, அதனை தொடர்ந்து முக்கிய தலைவர்களை தொடர்புகொண்டு பாண்டே சித்தாந்தம் குறித்து மாற்றி கொள்ள அறிவுறுத்த..,

Loading...

அவரோ அப்படி ஊடகத்தின் கொள்கையில் சமரசம் செய்துதான் இருக்கவேண்டும் என்றால் அப்படிப்பட்ட பொறுப்பே தேவையில்லை என முடிவு செய்து அதில் இருந்து வெளியேறிவிட்டார், இந்நிலையில் தொடர்ந்து சித்தாந்த ரீதியாக பாண்டே குறிவைக்க படுகிறாரா? எத்தனையோ ஊடகவியலாளர்கள் நடுநிலையாளர்கள் போர்வையில் பணியாற்றும் போது அவர்களுக்கு எந்த அரசியல் கட்சியும் அழுத்தம் கொடுப்பதில்லை ஆனால் பாண்டே மற்றும் சிலரை குறிவைத்து தாக்குவதன் பின்னணி என்ன என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

தற்போது பாண்டே இனி முழு மூச்சில் தனது சாணக்யா இணைய ஊடக தொலைக்காட்சியை சாட்டலைட் தொலைக்காட்சியாக மாற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார் என்றும் விரைவில் பாண்டே தனது பணியை தொடருவார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் பாண்டேவிற்கு தொடர்ந்து குடைச்சலை கொடுக்கும் கட்சி எது என்ற கேள்வியும் பலரது மனதிலும் எழுந்தவண்ணம் உள்ளது.

இதற்கிடையில் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து பாண்டே வேந்தர் தொலைக்காட்சியின் CEO எனும் பொறுப்பை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்து தெய்வங்களை நேரடியாக விமர்சனம் செய்தவர்கள் பலர் முன்னணி தொலைக்காட்சியில் பணியில் இருப்பதும், திராவிட கொள்கையை நேரடியாக கேள்வி கேட்பவர்கள் குறிவைக்க படுவதும் தொடர் கதையாக மாறியுள்ளது.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3893 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*