Connect with us

#24 Exclusive

ராமாவரம் தோட்டத்தில் நடந்தது என்ன? நடிகை லதா பேட்டி !

பெரியார் எனும் ஈவெரா இந்து கடவுள்களான இராமர், சீதை, முருகன் ஆகியோர் உருவப்படத்தினை அவமானம் செய்ததாக துக்ளக் பத்திரிக்கையின் 50 வது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய சம்பவம், பரபரப்பை உண்டாக்கியது, வழக்கத்திற்கு மாறாக பெரியாரிஸ்ட்கள் பெரியார் அவ்வாறு எந்த தவறையும் செய்யவில்லை ரஜினி தவறாக குற்றம் சாட்டுகிறார் என்று தெரிவித்தனர்.

இதற்கு ரஜினி மன்னிப்பு கேட்கவேண்டும் என அவர்கள் வலியுறுத்தியபோது, நேற்று ரஜினிகாந்த் தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது நான் ஆதாரங்களின் அடிப்படையில்தான் பேசினேன் மன்னிப்பு கேட்க முடியாது என தெளிவு படுத்திவிட்டார் இதனால் அவரது பேச்சிற்கு மறுப்பு தெரிவித்த சிலர், நடிகர் ரஜினி இங்கு மன்னிப்பு கேட்கமாட்டார், எம் ஜி ஆர்ரிடம் மன்னிப்பு கேட்பார் என்று விமர்சனம் செய்தனர்.

மேலும் எம் ஜி யாரின் ராமவரம் தோட்டத்தில் நடிகை லதாவை முன்வைத்து ரஜினியை எம் ஜி ஆர் தாக்கினார் என்று பலரும் விமர்சனம் செய்தனர், இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் நடிகை லதா பேட்டி கொடுத்துள்ளார், அந்த வீடியோ தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது, அதில் ரஜினி மிகவும் நல்ல மனிதனர், அப்போது எப்படி இருந்தாரோ இத்தனை உயரங்களை அடைந்த பின்பும் ரஜினி அவ்வாறு அடக்கமாக இருப்பவர்,

Loading...

அவரை விமர்சனம் செய்ய எதுவும் கிடைக்காததால் இதுபோன்ற வதந்திகளை பரப்பி வருவதாக குற்றம் சுமத்தினார், ராமாவரம் தோட்டத்தில் நடந்ததாக பேசப்படும் தகவல் உண்மையா என்ற கேள்விக்கு லதா அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளார், அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Loading...

அந்த நிகழ்ச்சியில் நக்கலாக சீமானை போறபோக்கில் சைமன் என்றும் முப்பாட்டன் முருகன் என்றும் நடிகை லதா கிண்டல் அடித்திருப்பது தற்போது வைரலாகி வருகிறது, இந்த வீடியோவினை பகிர்ந்து ரஜினி மீது வைத்த ஒற்றை குற்றச்சாட்டிற்கு விளக்கம் வந்துவிட்டது, திமுக மீது வைத்த மூலபத்திரம் எங்கே எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர். (வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது. )

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending