பெயருக்கு ஏற்ற வீரம் இராமநாதபுரம் பெண்மணி செய்த சாதனையை பார்த்தீர்களா !

பெயருக்கு ஏற்ற வீரம் இராமநாதபுரம் பெண்மணி செய்த சாதனையை பார்த்தீர்களா !

Loading...

சிறு வயதிலே குழந்தைகளுக்கு கல்வியை கற்று தருவதோடு , விளையாட்டு ஆர்வத்தையும் பெற்றோர்கள் கற்று கொடுக்கவேண்டும் என்று விளையாட்டு போட்டியில் தடம் பதித்தவர்கள் பல காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவி , மாவட்ட, மாநில மற்றும் மண்டல அளவிலான தடகளப் போட்டிகளில் பங்கேற்று, இதுவரை 48 தங்கப் பதக்‍கங்கள் 10 வெள்ளிப் பதக்‍கங்கள் 8 வெண்கலப் பதக்‍கங்கள் என வெற்றிப் பதக்‍கங்களைக்‍ வென்று சாதனைபடைத்து வருகிறார்.

Loading...

இராமநாதபுரத்தில், காவல்துறை துணை ஆய்வாளரான திரு. மோகனின் மகள், ஐஸ்வர்யா, அங்குள்ள மேல்நிலைப்பள்ளி ஒன்றில் ப்ளஸ் 1 வகுப்பில் பயின்று வருகிறார். தனது தந்தையின் வழிகாட்டுதலில் சிறு வயதிலிருந்தே, வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் ஆகிய தடகளப் போட்களில் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார்.

மாவட்ட அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்று தங்கப் பதக்‍கங்களையும், வெள்ளிப் பதக்‍கங்களையும் வென்ற மாணவி ஐஸ்வர்யா, அண்மையில் ஈரோடு மாவட்டம் பண்ணாரியில் நடைபெற்ற மாநில அளவிலான வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்‍கங்களை வென்றுள்ளார்.

இருவாரங்களுக்‍கு முன்னர் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற தென்மாநிலங்களுக்‍கு இடையேயான போட்டியிலும், அண்மையில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற மாநில அளவிலான தடகளப்போட்டியிலும் பங்கேற்று தங்கப் பதக்‍கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். இதுவரையில் 48 தங்கப் பதக்‍கங்கள் 10 வெள்ளிப் பதக்‍கங்கள் மற்றும் 8 வெண்கலப் பதக்‍கங்களை வென்றுள்ள தடகள வீராங்கனை ஐஸ்வர்யா, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான தடகளப் போட்டிகளில் தடம் பதிக்‍க வேண்டும் என்ற வேட்கை கொண்டுள்ளார். அவர் வீடு முழுவதும் நிறைந்துள்ள, சான்றிதழ்களும், பதக்‍கங்களும் அவரது சர்வதேச சாதனைக்‍கு முன்னோட்டம் கூறுவதாக அமைந்துள்ளன.

இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து பெண்மணி சாதனையில் ஈடுபட்டு வருவதை இராமநாதபுரம் மக்கள் மட்டுமின்றி தமிழகமே வாழ்த்தி வருகிறது, நாமும் வாழ்த்துவோம் !

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3941 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*