Connect with us

#24 Exclusive

இராமநாதபுரம் கிராமத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், திமுக முஸ்லீம் அமைப்புகள் அதிர்ச்சி ! தமிழகத்தில் மாற்றம் உண்டானது !!!

Published

on

இராமநாதபுரம் :- குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இராமநாதபுரம் மாவட்டம் தேர்போகி அண்டை கிராமத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், யாரெல்லாம் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்களோ அவர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதுடன் எங்கே இந்துக்கள் ஒட்டு இனி நமக்கு கிடைக்காதோ என அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இராமநாபுரம் மாவட்டம் தேர்போகி அருகே மாடசாமிகோவில் உள்ளது, இதன் அருகில் சித்தார்கோட்டை, புதுவலசை, பனைக்குளம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன, இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இராமநாதபுரம் இருந்த நிலைமையும் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றம் அந்த பகுதியை சேர்ந்தவர்களை அதிர்ச்சியில் உண்டாகியுள்ளது.

ராமநாதபுரம் நகர் முழுவதும் முஸ்லிம்கள் கடைகள், அடுக்கு மாடி கடை வாளாகங்களாக மாறி விட்டன, நகரின் முக்கிய வீதியான வழிவிடு முருகன் கோவில் சன்னதி முழுவதும் முஸ்லிம்கள் கடைகள் உருவாகிவிட்டன எனவும் அதன் காரணமாக பல தலைமுறையாக நடைபெறும் வழிவிடு முருகன் கோவில் திருவிழாவின் போது மேளம் அடிக்கவே கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகவும், அப்போது மேளம் அடிக்க கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெரும்பாலும் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட முஸ்லிம்கள் இல்லை என்றும் அவர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்த கோரிக்கை வைக்கப்பட்டது ஆனால் அதனை காவல்துறை விசாரணை செய்யவில்லை.

Loading...

இந்நிலையில் தான் தற்போது மத்திய அரசு மிக முக்கிய திட்டமான CAA திட்டத்தை அமல்படுத்தியுள்ளதை வரவேற்பதாகவும், இதனால் கடலோரம் மாவட்டமாக உள்ள இராமநாதபுரத்தில் உண்மையான குடிமக்கள் அடையாளம் காணப்படுவார்கள் என்றும், குறிப்பிட்டு சொல்ல போனால் திட்டமிட்டு இந்துக்களை சிறுபான்மையினராக மாற்றும் முயற்சி தடுக்கப்படும் என்று கூறிய அவர்கள்.,

Loading...

இனி CAA எனப்படும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்த அரசியல் கட்சிகளில் இருக்க போவதில்லை என்றும், இந்தியாவின் ஒருமை பாட்டை சீர்குலைக்க நினைக்கும் தனி அமைப்புகள், மற்றும் தொழில் நிறுவனங்கள் மற்றும் கடைகளில் வியாபாரத்தில் ஈடுபட போவதில்லை என்ற முடிவினையும் எடுத்துள்ளனர்.

வடமாநிலங்களில் இது போன்ற முடிவுகள் எடுப்பது சாதாரண விஷயம், ஆனால் தமிழகத்தில் இதனை செய்வதற்கு உண்மையில் இந்தியாவின் மீதான அக்கறையும், தொடர்ந்து மதமாற்றம் உள்ளிட்ட காரணங்களால் தங்கள் கலாச்சாரம் அழியக்கூடாது என்று எண்ணுபவர்களால் மட்டுமே இந்த சாத்தியம் என கூறப்படுகிறது, அதே நேரம் தொடர்ந்து முஸ்லீம் வாக்கு வங்கிகளுக்காக இந்துக்கள் வாக்கு வங்கியை சில குறிப்பிட்ட இயக்கங்கள் இழந்து வருவதும் இராமநாதபுரம் மாவட்டத்தில் இந்துக்கள் வாக்குகள் ஒருங்கிணைந்து வருவதும்..,

திமுக உள்ளிட்ட குடியுரிமை மசோதாவிற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது, மேலும் இனிமேலாவது இந்தியர்கள் மனநிலையில் இருந்து இங்குள்ள அரசியல் கட்சிகள் யோசனை செய்யவேண்டும் என்றும், இல்லை என்றால் மிக பெரிய அளவில் பாதிப்பினை சந்திக்க வேண்டி வரும் என்பது கண்கூடாக தெரிவதாக நெட்டிசன்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

தமிழகத்தில் தானா இப்படி ஒரு மாற்றம் !!! source – (முருகேஷ் இராமநாதபுரம் )

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending