Connect with us

#24 Exclusive

தடைகளை தகர்த்து ரிலீஸ் ஆகிறது பிரபல எழுத்தாளரின் படம்

பிரபல எழுத்தாளர் ராஜூமுருகன் அவர்கள் இயக்கிய ’குக்கூ’ மற்றும் ’ஜோக்கர்’ ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அவர் இயக்கிய அடுத்த திரைப்படம் ‘ஜிப்ஸி’. இந்த படத்தின் படப்பிடிப்பில் மற்றும் தொழில்நுட்ப பணிகள் கடந்த ஆண்டே முடிவடைந்த நிலையில் சென்சாரில் இந்த படம் சிக்கி ரிலீஸ் செய்ய முடியாமல் இருந்தது. சென்சார் அதிகாரிகள் ஒருசில முக்கிய காட்சிகளை கட் செய்ய வேண்டும் என்று கூறியதற்கு இயக்குனர் ராஜுமுருகன் ஒப்புக் கொள்ளாததால் இந்த படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காமல் இருந்தது

இதனை அடுத்து தற்போது டிரிபியூனலுக்கு சென்ற இயக்குனர் ராஜுமுருகன் அங்கு போராடி தற்போது சென்சார் சான்றிதழ் பெற்று வந்துள்ளார். இந்த படத்திற்கு ’ஏ’ சான்றிதழ் தற்போது கிடைத்துள்ளது. இந்த நிலையில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய சரியான நேரத்தை படக்குழுவினர் தேர்வு செய்ய காத்திருந்த நிலையில் தற்போது மார்ச் 6ஆம் தேதி இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்

சற்று முன் இந்த படத்தின் இயக்குனர் ராஜுமுருகன் இந்த படத்தின் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு மார்ச் 6ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என்பதை உறுதி செய்துள்ளார் இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி இந்த படத்தில் ஜீவா, நடாஷா சிங், சன்னி வாய்னே, லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்

Loading...
Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending