Connect with us

#24 Exclusive

ராஜ்நாத், யோகி ஆகியோருக்கான NSG பாதுகாப்பு நீக்கம், சொல்லி அடிக்க தயாரான மோடி அரசு ! உள் நுழைய தயார் !!

டெல்லி :- மத்திய அரசு பல அதிரடி நடவடிக்கைகளை திட்டமிட்டு கன கச்சிதமாக காய் நகர்த்தி வருவது குறிப்பிடத்தக்கது, அதில் மிகவும் முக்கிய பகுதியாக இராணுவ வீரர்கள், சிறப்பு பாதுகாப்பு படையினர், மேலும் தேர்தெடுக்கப்பட்ட கமாண்டோ வீரர்களை அவர்களுக்கு உரிய பொறுப்பில் பணியமர்த்தி மிகவும் முக்கியத்திட்டத்தினை செயல்படுத்த காய் நகர்த்தி வருகிறது.

நாட்டில் உள்ள தேர்வு பெற்ற முக்கிய வீரர்கள் பலரும் அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய நபர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் பெரும் பகுதி நாட்களை செலவு செய்வதாக அமைந்துள்ளது, இதனை மத்திய அரசு அதிரடியாக மாற்ற திட்டமிட்டு தீவிரவாத அச்சுறுத்தல் இல்லாத நபர்களுக்கு முதலில் பாதுகாப்பினை குறைத்து கொண்டு வருகிறது, அதன் பொருட்டு அவர்களுக்கு தேவையான பாதுகாப்பினை CISF, CRPF போன்ற பாதுகாப்பு படையினரை கொண்டு கொடுக்க திட்டமிட்டுள்ளது.

இதன் பொருட்டு இதன் மூலம் பாதுகாப்பு துறை அமைச்சர். ராஜ் நாத் மற்றும் உபி முதல்வர் ஆகியோருக்கான NSG பாதுகாப்பு நீக்கப்படும். இனி இவர்களை பாராமிலிட்டரி வீரர்கள் பாதுகாப்பார்கள்.முன்னாள் முதல்வர் மாயாவதி,முலாயம் சிங் யாதவ்,சந்திரபாபு நாயுடு, பிரகாஷ் சிங் பாதல்,பரூக் அப்துல்லா ஆகியோருக்கு  NSG பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.மேலும் அஸ்ஸாம் முதல்வர் சர்பனந்தா சோனோவால்,அத்வானி ஆகியோருக்கும் NSG பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

Loading...

இவர்கள் அனைவருக்கும் NSG பாதுகாப்பு நீக்கப்படும் NSG படை பிரிவு உருவாக்க பட்டதன் நோக்கம் பயங்கரவாதிகளை வேட்டையாடுவதற்குத்தான், ஆனால் இதுநாள் வரை அவர்கள் பாதுகாப்பிற்கே அதிகம் ஈடுபடுத்த பட்டு வந்தார்கள், தற்போது மத்திய அரசு இனி NSG படை பிரிவினரை கொண்டு உள்நாட்டில் தீவிரவாத செயல்களில் ஈசுபடுவோர், பயங்கரவாதிகளிக்கு ஆள் சேர்ப்போர் ஆகியோர்களை கண்டறியும் நடவடிக்கை எடுக்கவும் முழு நேர பணியில் ஈடுபடுத்த திட்டமிட்டே அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

Loading...

இனி NSG எனபடும் சிறப்பு பயிற்சி பெற்ற அமைப்பு உள்நாட்டு பயங்கரவாதிகளை வேட்டையாட களமிறங்கும் என்றும், 2023 – ம் ஆண்டிற்குள் இந்தியாவில் பயங்கரவாதிகள் மற்றும் அவரது ஆதரவாளர்களே இல்லாத நிலையை உருவாக்க நாள் குறித்து களத்தில் இறங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன, அதிலும் குறிப்பாக NSG படையினர், தமிழகத்தில் அதிகம் ஈடுபடுத்த படுவார்கள் என்று கூறப்படுகிறது அதற்கு காரணம் NIA தகவலின் படி 2014 ம் ஆண்டுமுதல் பிடிபட்ட 133 தீவிரவாத ஆதரவாளர்கள் பட்டியலில் 33 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.

இனி நமது பாதுகாப்பு வீரர்கள் எதிரி நாடுகளுக்குள் மட்டுநல்லாமல் உள் நாட்டு எதிரிகள் கூடாரத்திற்குள்ளும் நுழைய தாயார் ஆகிவிட்டனர்.

©TNNEWS24

Loading...

Trending