Connect with us

#24 Exclusive

ஹிந்துக்களுக்கு என இருக்கும் ஒரே நாடு இந்தியா ரஜினி அதிரடி !

ரஜினிகாந்த் கலந்து கொண்ட மேன் vs வைல்ட் நிகழ்ச்சி நேற்று பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது, நிகழ்ச்சி தொடங்கியது முதல் ரஜினி ரசிகர்கள் ட்விட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் நிகழ்ச்சியை ட்ரெண்டிங்கில் கொண்டுவந்தனர்.

இந்நிலையில் நிகழ்ச்சியின் சாகச பயணங்களுக்கு இடையே பியர் க்ரில்ஸ் கேட்கும் கேள்விகளுக்கு ரஜினி பதிலளித்து வந்தார், அப்போது இந்தியா குறித்து சொல்லுங்கள் என கேட்டதற்கு ரஜினி அளித்த பதில் பாராட்டுதலுக்கு உள்ளாகி வருகிறது அதில் :-

இந்தியா கலாச்சாரம் பண்பாடு ரீதியாக மிகவும் வளமான நாடு என் நாட்டினை அதே போல் ஏழ்மை இல்லாமல் பொருளாதாரத்திலும் வளமான நாடாக பார்க்க விரும்புகிறேன் என்று தெரிவித்தார் , அத்துடன் உலகில் நான்கு பெரிய மதங்கள் உள்ளன.இஸ்லாம்,
பெளத்தம்,கிருஸ்த்தவம்,ஹிந்து மதம்.இதில் மற்ற மதங்களுக்கு உலகம் முழுக்க பல நாடுகள் உள்ளன.ஹிந்துக்களுக்கு இருக்கும் ஒரே நாடு இந்தியாதான்.இன்னொன்று மிகக்சிறிய நாடான நேபாளம் மட்டும்தான்.

Loading...

ஆக இந்தியா மட்டும்தான் இந்த எல்லா மதங்களுக்குமான நாடாக உள்ளது.எல்லோரையும் சகோதர்களாக எண்ணுகிறார்கள்.இதை பெருமையாக உணர்கிறேன். என்று தெரிவித்தார் ரஜினியின் இந்த பேச்சு தற்போது சமூக வலிதளங்களில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்து வருகிறது.

Loading...

இந்நிலையில் பெரியாரிஸ்ட்கள் சமூகவலைத்தளங்களில் ரஜினிக்கு எதிராக கதறி வருகின்றனர், இந்தியா ஹிந்துக்களுக்கான நாடு இல்லை அனைவருக்குமான நாடு எவ்வாறு ரஜினி அவ்வாறு கூறலாம், இது மதம் ரீதியாக சொல்லப்பட்ட வார்த்தை என்று விமர்சித்து வருகின்றனர், ஆனால் ரஜினியின் கருத்திற்கு ஆதரவு பெருகிவருகிறது.

விமர்சகர் பாக்ட்டே கூறியபோது இந்தியாவும் அமெரிக்காவும் மதசார்பற்ற நாடுகள் தான் ஆனால் இங்கே உள்ளவர்கள் அமெரிக்காவை கிறிஸ்தவ நாடு என்றே கூறுவார்கள் அதேபோல் அமெரிக்கர்கள் நம் நாட்டை இந்து நாடு என்றே கூறுவார்கள் ஒட்டு மொத்த உலக நாடுகளும் இந்தியாவை இந்துக்கள் நாடுதான் என கூறுவார்கள் எனவே ரஜினி சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending