Connect with us

#24 Exclusive

சிஏஏ சட்டத்திற்கு எதிராக போராடுவதால் எந்த பிரயோஜனமும் இல்லை: ரஜினிகாந்த்

சிஐஏ சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் உள்பட பலர் போராடி வரும் நிலையில் இந்த சட்டத்திற்கு எதிராக போராடுவதால் எந்த பிரயோஜனமும் இல்லை என்றும் சிஐஏ சட்டத்தை வாபஸ் வாங்குவதற்கு வாய்ப்பே இல்லை என்று தான் கருதுவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் பேட்டை அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மேலும் சிஏஏ சட்டத்தால் இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டால் முதல் ஆளாக குரல் கொடுப்பேன் என்றுதான் தான் கூறியதாகவும் அதற்காக வன்முறையில் இறங்கி போராடுபவர்களுக்கெல்லாம் என்னுடைய ஆதரவு இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்

டெல்லியில் நடைபெற்ற வன்முறையை மத்திய அரசு இரும்பு கரம் கொண்டு அடக்கியிருக்க வேண்டும் என்றும் உளவுத்துறையின் தோல்வியே இந்த போராட்டம் கலவரமாக மாறியதற்கு காரணம் என்றும் அவர் தெரிவித்தார்

Loading...

மேலும் தான் பாஜகவின் ஆள் இல்லை என்றும் அவ்வாறு தன்னை சொல்வது வேதனை அடையச் செய்வதாகும் தனக்கும் பாஜகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். ரஜினியின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Loading...
Loading...

Trending